இன்று திரையில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தி வருகிறது கோட் திரைப்படம். இந்த நிலையில் தற்சமயம் யூ ட்யூப்பர் கோபி என்பவர் இந்த திரைப்படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை அளித்துள்ளார்.
இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் ஒருப்பக்கம் இவரை விமர்சித்து வருகின்றனர். படத்தின் கதை ஆக்ஷன் எதிலுமே புதுமையாக இல்லை. ஏற்கனவே விஜய் நடித்த திரைப்படங்களில் இருக்கும் வெற்றி பெற்ற காட்சிகளை எல்லாம் எடுத்து கோர்வையாக கோர்த்து இந்த திரைப்படத்தில் பயன்படுத்தி இருக்கின்றனர்.
கோட் விமர்சனம்:
பொதுவாக திரைப்படங்களை காப்பியடிப்பது என்றால் அட்லீயைதான் கூறுவார்கள். ஆனால் அட்லீயே மிஞ்சும் அளவிற்கு வெங்கட் பிரபு இந்த திரைப்படத்தில் வேலை பார்த்து இருக்கிறார். ஏனெனில் படம் முழுக்கவே நிறைய ஹாலிவுட் படங்களின் காப்பியை பார்க்க முடிகிறது.

மிஷன் இம்பாசிபல் போன்ற திரைப்படங்களை எல்லாம் இதில் பயன்படுத்தி இருக்கின்றனர். விஜய் மற்றும் அவரது தீவிரவாத தடுப்பு பிரிவு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு வேலையை செய்கின்றனர். அதில் எஸ்கேப் ஆகும் வில்லன் அதற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து அந்த கதாநாயகர்களுக்கு என்ன பிரச்சனை கொடுக்குறான்.
அதற்குப் பிறகு அதிலிருந்து இவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பது கதை. இதை மூன்று மணி நேரம் எடுத்திருக்க தேவையில்லை ஒரு மணி நேரத்திலேயே முடித்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார் கோபி.








