Tamil Trailer
யூ ட்யூப்பர் கோபி சுதாகர் நடிக்கும் படம்.. ஒரு வழியா வெளிவந்த டீசர்.!
Youtube பிரபலங்களில் வெகு காலங்களாகவே மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்கள் கோபி சுதாகர். பரிதாபங்கள் என்கிற சேனல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் கோபி மற்றும் சுதாகர் ஆரம்பத்தில் அரசியல் தலைவர்களை நகைச்சுவை செய்து வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.
அதன் பிறகு இப்பொழுது வாழ்க்கையில் நடக்கும் பல சுவாரஸ்யமான விஷயங்களை வீடியோக்களாக வெளியிட்டு வருகின்றனர். தொடர்ந்து அவர்களுக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இதற்கு நடுவே ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று மக்களிடம் அதற்காக நிதி கேட்டு சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் நிதி திரட்டல் ஒன்றை செய்தனர்.
ஆனால் அதில் சில மோசடிகள் நடந்ததாக பேச்சுக்கள் இருந்தன. அதனால் கோபி மற்றும் சுதாகரின் பெயர் அதிகமாக சர்ச்சைக்கு உள்ளானது. அதற்கு பிறகு அவர்கள் நடிப்பில் திரைப்படமும் எதுவும் வெளிவராமல் இருந்தது. இந்த நிலையில் இந்த பிரச்சனைகளுக்குப் பிறகு தற்சமயம் மீண்டும் படம் நடிப்பில் இறங்கி இருக்கின்றனர்.
அந்த வகையில் அவர்கள் நடிக்கும் திரைப்படத்தின் பெயர் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது இந்த திரைப்படத்திற்கு ஓ காட் பியூட்டிஃபுல் என்ற பெயர் வைத்திருக்கின்றனர்.
இந்த படம் முழுக்க முழுக்க 1990களில் இருந்து 2000க்குள் பிறந்த 90ஸ் கிட்ஸ் களின் வாழ்க்கையை காட்டுவதாக இருக்கும் என்பது டீசர் மூலமாக தெரிகிறது தொடர்ந்து பரிதாபங்கள் சேனலில் வெளியிட்ட வீடியோக்கள் பலவும் கூட அப்போதைய காலகட்டத்தை காலகட்டத்தை சேர்ந்த 90ஸ் கிட்ஸ் களுக்கான கதையாக தான் இருந்தது.
எனவே இந்த படம் கண்டிப்பாக வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே யூடியூபில் பிரபலமாக இருந்த நக்கலைட்ஸ் என்கிற குழு இயக்கி வெளியான திரைப்படம் தான் குடும்பஸ்தன். அந்த திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்றது என்பதால் பரிதாபங்கள் குழுவின் இந்தப் படத்தின் மீதும் வரவேற்பு இருந்து வருகிறது.
