கேரள மக்களை தவறா சித்திரிக்குதா!.. ஜி.வி பிரகாஷின் ரெபல் படம் எப்படி இருக்கு!..
Rabel Movie : மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து கேரள மக்கள் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர். முக்கியமாக எழுத்தாளர் ஜெயமோகன் கேரள மக்களை குறித்து மிகவும் அவதூராக பேசியிருந்தது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தும் விஷயமாக அமைந்திருந்தது.
ஏனெனில் தமிழ்நாட்டு திரைப்படங்கள் பலவும் கேரளாவில் ஓடி நல்ல வெற்றியை கொடுத்திருக்கிறது. அதேபோல கேரள திரைப்படங்களும் தமிழ்நாட்டு மக்களுக்கு பிடித்தவையாக இருக்கின்றன. இதற்கு நடுவே கேரளா மக்கள் பெரும்பாலும் குடிகாரர்கள் எனவும் அவர்கள் தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வரும்பொழுது ஒழுக்கமாக நடந்து கொள்ளவில்லை என்றும் பெரும் குற்றச்சாட்டை வைத்தார் ஜெயமோகன்.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் ரெபெல் கேரள மக்களை தவறாக சித்தரிக்கும் விதமாக இருப்பதாக படத்தை பார்த்தவர்கள் கூறியிருக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் நடிப்பில் தற்சமயம் வெளியாகி இருக்கும் திரைப்படம் ரெபல். இந்த திரைப்படத்தின் கதைப்படி தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் ஜிவி பிரகாஷ் கல்லூரி படிப்புக்காக கேரளாவில் பாலக்காட்டில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்கின்றார்.
அங்கு தமிழ்நாட்டு மக்களை மிகவும் தாழ்த்தி பார்க்கின்றனர் அங்கு இருக்கும் மாணவர்கள். இதனை தொடர்ந்து அங்கு ஜிவி பிரகாஷ் செய்யும் புரட்சியை அடிப்படையாக வைத்து கதைக்களம் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பொதுவாக தமிழ்நாட்டில் இருந்து வரும் மக்களை அப்படி கேரள மக்கள் தனித்து பார்ப்பதில்லை என்று கூறப்படுகிறது.
அதே சமயம் படத்தில் இசை ஒளிப்பதிவு எல்லாம் அற்புதமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த ரெபேல் என்கிற பாடலை மட்டும் தவிர்த்திருக்கலாம் என்கின்றனர் நெட்டிசன்கள்.
இந்த நிலையில் படத்தில் எதற்காக இப்படி கேரள மக்களை தவறாக சித்தரித்து காட்டப்பட்டது என்று தெரியவில்லை என்று பலரும் இது குறித்து விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.