Box Office
ஹர ஹர வீரமல்லு திரைப்படத்தின் முதல் நாள் வசூல்..!
க்ரிஷ் ஜலகரமுடி மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ஹரஹர வீர மல்லு. தெலுங்கு சினிமாவின் மிக முக்கிய நடிகரான பவர் ஸ்டார் பவன் கல்யாண் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இதில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும் சத்யராஜ், நாசர் பாபி தியோல் மாதிரியான பல முக்கிய பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பல வகையான விமர்சனங்கள் இருந்து வருகின்றன.
ஆனால் தெலுங்கு சினிமாவில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. முகலாயர்கள் காலகட்டத்தில் அவர்களை எதிர்த்து போராடிய ஒரு வீரனின் கதையாக ஹரஹர வீரமல்லு திரைப்படத்தின் கதை இருக்கிறது.
இந்த படம் உலக அளவில் முதல் நாள் மட்டும் 75 கோடி வசூல் செய்து பெரும் சாதனை படைத்திருக்கிறது. தெலுங்கு சினிமாவில் தான் அதிகமான வசூலை கொடுத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.
