Connect with us

அந்த படத்துல எனக்கு வாய்ப்பு இல்லன்னு சொல்லிட்டாங்க!.. ரஜினி ரெக்கமண்டேஷனில் வாய்ப்பை பெற்ற நடிகை!..

rajinikanth2

Cinema History

அந்த படத்துல எனக்கு வாய்ப்பு இல்லன்னு சொல்லிட்டாங்க!.. ரஜினி ரெக்கமண்டேஷனில் வாய்ப்பை பெற்ற நடிகை!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் எப்போதும் வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ப்ளாக் அண்ட் வொயிட் காலக்கட்டத்தில் துவங்கி இப்போது வரை அவரது திரைப்படத்திற்கு இருக்கும் வாய்ப்பு மட்டும் குறையவே இல்லை எனலாம்.

இந்த நிலையில் ரஜினியுடன் நல்ல பழக்கத்தில் இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சத்யப்ரியா. தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு இவர் அம்மாவாக நடித்துள்ளார். முக்கியமாக வில்லி அம்மா கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகையாக இவர் இருந்து வந்தார்.

தற்சமயம் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் அம்மாவாக நடித்து வருகிறார். பாட்ஷா திரைப்படத்தில் கூட ரஜினிக்கு அம்மாவாக நடித்திருப்பார். படையப்பா திரைப்படம் எடுக்கப்பட்டப்போது அந்த படத்தில் இவருக்கும் வாய்ப்பளிப்பதாக படக்குழுவினர் கூறி இருந்தனர்.

மீண்டும் ரஜினியோடு ஒரு படம் நடிக்க போகிறோம் என்பது சத்திய ப்ரியாவிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. மேலும் அந்த படத்தில் ரம்யா கிருஷ்ணனின் அம்மா கதாபாத்திரம் முக்கியமான கதாபாத்திரம் என கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிப்பதை தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் கூறிவிட்டார் சத்யப்ரியா.

ஆனால் படக்குழு திடீரென அம்மா கதாபாத்திரம் வேண்டாம் அதை அப்பா கதாபாத்திரமாக மாற்றிவிடலாம் என முடிவெடுத்து அதற்காக ராதாரவியை தேர்ந்தெடுத்திருந்தனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சத்யப்ரியா உடனே ரஜினிகாந்திற்கு போன் செய்து அண்ணா உங்க படத்தில் நடிக்கப்போகிறேன் என ஊர் முழுக்க சொல்லிவிட்டேன்.

இப்போ நடிக்கலைனா அசிங்கமா போயிடும். அதுனால ஒரு சின்ன கதாபாத்திரமாவது வாங்கி கொடுங்க என கேட்டுள்ளார். அதனை தொடர்ந்து படையப்பாவில் அவருக்கு ரஜினிகாந்த் வாய்ப்பு வாங்கி தந்துள்ளார்.

To Top