மின்னல் முரளியை காபி அடித்தாரா இயக்குனர்? –  கலக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி!

தமிழில் இசையமைப்பாளராக வந்து தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வருபவர் நடிகர் ஹிப் ஹாப் ஆதி. இக்கால இளைஞர்களுக்கு ஒத்து போகும் வகையில் இவரது கதைகள் இருப்பதால் இவருக்கென்று ஒரு மார்கெட் தமிழ் சினிமாவில் உருவாகியுள்ளது.

ஹிப் ஹாப் ஆதி நடித்த மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய திரைப்படங்கள் நல்ல ஹிட் கொடுத்த படங்கள். ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த அன்பறிவு படம் ரசிகர்களிடையே அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. 

இதையடுத்து தற்சமயம் ஹிப் ஹாப் ஆதி மரகத நாணயம் திரைப்படத்தின் இயக்குனர் ஆர்க் சரவணன் இயக்கும் வீரன் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதி கட்ட வேலைகள் சென்றுக்கொண்டுள்ளன.

இயக்குனர் ஆர்க் சரவணன் ஏற்கனவே மரகத நாணயம் படம் மூலம் மக்களிடையே பிரபலமானவர் என்பதால் இந்த படத்தில் நம்பி நடித்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி. ஆனால் மலையாளத்தில் வந்த மின்னல் முரளி திரைப்படத்தில் வருவது போல இந்த படத்திலும் கூட கதாநாயகன் மின்னல் தாக்கி சக்திகளை பெறுவது போல கதை அமைந்துள்ளதாம்.

ஆனால் இதுக்குறித்து தயாரிப்பாளர் கூறும்போது இந்த படத்தின் கதையை அவர் 2016 ஆம் ஆண்டே எழுதிவிட்டதாக கூறியுள்ளாராம். இதனால் இந்த படத்தை மின்னல் முரளியின் காபி என கூறிவிடுவார்களோ என்று கலக்கத்தில் உள்ளாராம் ஹிப் ஹாப் ஆதி.

ஆனால் உண்மையில் இடியின் மூலம் சக்தி கிடைப்பது என்பது டிசி காமிக்ஸில் வரும் ஃப்ளாஸ் என்னும் கதாநாயகனின் கதையாகும். அதை காப்பி அடித்துதான் மின்னல் முரளியே எடுக்கப்பட்டுள்ளது என கூறுகின்றனர் ஹாலிவுட் சினிமா ரசிகர்கள்.

Refresh