பாலச்சந்தர் இல்லனா இந்த இயக்குனர்கிட்ட போயிருப்பேன்! – விவேக் சொன்ன அந்த இயக்குனர் யார் தெரியுமா?

நடிகர் விவேக் முற்போக்கான பல விஷயங்களை நகைச்சுவையின் வழியே மக்களிடம் கொண்டு சென்றவர். அவர் நடித்த பல படங்களில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பல கருத்துக்களை முன் வைத்திருப்பதை பார்க்க முடியும்.

விவேக்கை முதன் முதலில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர் இயக்குனர் கே.பாலசந்தர். 80 மற்றும் 90 களில் பெரிய ஹீரோக்களாக இருந்த பலரை திரைக்கு அறிமுகம் செய்தவர் இயக்குனர் பாலச்சந்தர். அந்த வரிசையில் காமெடியன் விவேக்கும் ஒருவர்.

முன்னர் நடந்த பேட்டி ஒன்றில் இயக்குனர் பாலச்சந்தர் உங்களை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தவில்லை என்றால் அடுத்து எந்த இயக்குனரிடம் போய் இருப்பீர்கள் என்ற கேள்வியை கேட்டனர்.

அதற்கு விவேக் “நான் சத்யஜித்ரேவை பார்த்திருப்பேன். சொல்ல போனால் அவரிடமும் நான் வாய்ப்பு கேட்டு அவரை சந்தித்திருந்தேன். ஆனால் அவருக்கு முன்னதாக பாலசந்தரிடம் வாய்ப்பு கிடைத்தது” என கூறியுள்ளார்.

சத்யஜித்ரே வட இந்தியாவை சேர்ந்த இயக்குனர் ஆவார். இந்திய சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர் என சத்யஜித்ரேவை கூறலாம். உலக சினிமாவிற்கு சமமான அளவில் அவர் திரைப்படங்களை எடுத்துள்ளார்.

ஆனால் விவேக் சினிமாவிற்கு வந்த புதிதிலேயே இந்த அளவிற்கு ஒரு பெரும் இயக்குனர் குறித்து அறிந்துக்கொண்டு அவரிடம் வாய்ப்பு கேட்டுள்ளாரே? என்பது ஆச்சரியமான தகவலாக உள்ளது.

Refresh