News
ஹனி மூன் போன இடத்துல டிடெக்டிவ் வேலை..- காமெடி டிடெக்டிவ் படம்- மர்டர் மிஸ்ட்ரி
ஒரு சுவாரஸ்யமான தமிழ் டப்பிங் ஹாலிவுட் திரைப்படம் குறித்து இப்போது பார்க்க போகிறோம். சும்மா ஹனி மூன் போகலாம் என கிளம்பி வம்படியாக ஒரு கொலை குற்றத்திற்குள் சிக்கும் ஜோடிகளை வைத்து செல்லும் கதைதான் மர்டர் மிஸ்ட்ரி.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பெரு நகரில் என்.ஒய்.பி.டி என்னும் காவல் துறை அமைப்பில் பணியாற்றி வருபவர்தான் கதாநாயகன் நிக், அவரது மனைவி ஆட்ரே. நிக்கிற்கு ஒரு டிடெக்டிவ் ஆக வேண்டும் என்றுதான் ஆசை என்றாலும் பலமுறை முயற்சி செய்தும் அவரால் டிடெக்டிவ் ஆக முடியவில்லை.
எனவே தனது மனைவியிடம் தான் ஒரு டிடெக்டிவ் என்று பொய் சொல்லி வைக்கிறார். வெகு வருடமாக ஆட்ரேவிற்கு யூரோப்பிற்கு ஒரு பயணம் சென்று வர ஆசை. எனவே திருமணமாகி 15 வருடம் கழித்து இவர்கள் இருவரும் யூரோப்பிற்கு ஹனி மூன் செல்கின்றனர்.
அப்போது ஆட்ரே ஒரு பணக்காரரை பார்க்கிறார். அந்த பணக்காரர் இவர்களை ஒரு திருமணத்திற்கு அழைக்கிறார். அந்த திருமணத்தில் உள்ள முக்கியமான நபர் மர்மமான முறையில் சாகிறார். தொடர்ந்து அங்கு மர்மமான முறையில் கொலைகள் நடக்க பழி இந்த தம்பதிகள் மீது விழுகிறது.
நிஜமாக டிடெக்டிவ் ஆகவில்லை என்றால் என்ன?. இந்த குற்றத்தில் குற்றவாளியை கண்டுப்பிடிப்போம் என களம் இறங்குகிறார் ஹீரோ. அவர் எப்படி குற்றவாளியை கண்டறிகிறார் என்பதை மிகவும் நகைச்சுவையான கதை ஓட்டத்தின் மூலம் காட்டியுள்ளனர். இந்த படம் நெட்ப்ளிக்ஸில் தமிழில் காண கிடைக்கிறது.
