மீண்டும் ஒரு அந்நியனா? – லீக் ஆன கோப்ரா பட கதை!

நடிகர் விக்ரம் என்றாலே வித்தியாசம் என நாம் கூறலாம். அந்த அளவிற்கு பல வித்தியாசமான கதை களத்தில் நடித்துள்ளார் நடிகர் விக்ரம். முக்கியமாக நடிப்பிற்கு சவால் விடக்கூடிய பல கதாபாத்திரங்களை தொடர்ந்து எடுத்து நடிப்பவர் நடிகர் விக்ரம். அப்படி தற்சமயம அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் பிரபலமான திரைப்படம்தான் கோப்ரா. 

Social Media Bar

இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். ஏற்கனவே இமைக்கா நொடிகள், டிமாண்டி காலணி போன்ற ஹாரர் மற்றும் த்ரில்லர் படங்களை இவர் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் கோப்ரா திரைப்படத்தில் பல கதாபாத்திரங்களில் விக்ரம் வருகிறார் என்பது ஆதிரா என்ற அந்த படத்தின் பாடல் வழியாக தெரிந்தது. படக்கதைப்படி விக்ரம் ஒரு திருடன் என்பது பலரும் யூகித்த விஷயமாகும்.

ஆனால் படத்தில் விக்ரமிற்கு மல்டி பர்சானிலிட்டி மனநோய் இருக்கும் என கூறப்படுகிறது. 

அதில் அவருக்குள் இருக்கும் இரண்டாவது கதாபாத்திரம் அறிவாளியாக இருக்கும், அது கணிதத்தில் திறமையானதாக இருக்கும். அந்த கதாபாத்திரம்தான் திருட்டு வேலைகளை எல்லாம் பார்க்கும். அதற்காகவே இத்தனை வேஷங்களில் விக்ரம் வருவதாக கூறப்படுகிறது. இவை யாவும் ஆதீரா பாடலில் வரும் வரிகளை வைத்து ரசிகர்களே முடிவு செய்த கதையாகும்.

இப்படியாக கதை இருக்கும் பட்சத்தில் படம் நல்லப்படியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வருகிற 11 ஆகஸ்ட் அன்று இந்த படம் வெளியாக இருக்கிறது. வெளியாகும்போது படத்தின் கதை எந்தளவிற்கு உண்மை என்பதை நாம் அறிய முடியும்.