News
ஒருநாள் கூட தாக்கு பிடிக்க முடியும்னு தோணல.. விஜய்க்கு செஞ்சு கொடுத்த சத்தியம்! – மனம் திறந்த லோகேஷ்!
தமிழ் சினிமா ரசிகர்களும், சினிமா இண்டஸ்ட்ரியுமே பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி இருக்கும் படம் லியோ. வெற்றி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இந்த படம் அக்டோபர் 19 திரையரங்குகளில் வெளியாகிறது. அதற்கு இசை வெளியீட்டு விழா பிரச்சினை, முதல் நாள் சிறப்பு காட்சி பஞ்சாயத்து என பல பிரச்சினைகளை லியோ எதிர்கொண்டு வருகிறது.
இந்த படம் தொடங்கியது முதலே பெரும் பொருட்செலவில் நடந்து வரும் நிலையில் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இதனால் படத்தின் ஷூட்டிங்கையே முதலில் கேரளா பக்கம் நடத்த திட்டமிட்டிருந்த லோகேஷ் கனகராஜ் பின்னர் அதை காஷ்மீர் என மாற்றி இருக்கிறார்.
அங்கு மொத்த படக்குழுவையும் தனி விமானத்தில் அழைத்து சென்ற பின் உறைய வைக்கும் குளிரும், அசாதாரணமான சூழல்களும் ஒரு சில நாட்களுக்கு மேல் தாக்குபிடிக்க முடியாது என லோகேஷை யோசிக்க வைத்ததாம். ஆனால் உள்ளூர் மக்களின் ஆதரவு, ராணுவத்தினரின் உதவி ஆகியவற்றால் வெற்றிகரமாக இடைவெளியே விடாமல் 50 ஷூட்டிங்கை நடத்தியதாக லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதுபோல காஷ்மீரில் பகலை விட இரவில் குளிர் அதிகமாக இருக்கும். ஆனால் படத்தின் பல காட்சிகள் இரவு நேரத்தில் படம் பிடிக்க வேண்டியிருந்திருக்கிறது. இதனால் ஒரு 20 நாட்கள் நைட் ஷூட் போக வேண்டும் என விஜய்யிடம் கேட்டிருக்கிறார் லோகேஷ். ”20 நாட்களுக்கும் மேல் ஷூட்டிங் இழுத்துட்டு போகாதுன்னு சத்தியம் பண்ணு” என விளையாட்டாய் கேட்டாரம் விஜய். ஆனால் சீரியஸாகவே சத்தியம் செய்து கொடுத்த லோகேஷ் கனகராஜ் சொன்னபடி 20 நாட்களில் நைட் ஷூட்டை முடித்தாராம். இதையும் அவர் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
