Connect with us

என் மானத்தை வாங்குறதுக்காகவே மேடைக்கு கூப்பிட்டீங்களா!.. இளையராஜாவை நேரடியாக கேட்ட கமல்ஹாசன்!..

ilayaraja kamalhaasan

Cinema History

என் மானத்தை வாங்குறதுக்காகவே மேடைக்கு கூப்பிட்டீங்களா!.. இளையராஜாவை நேரடியாக கேட்ட கமல்ஹாசன்!..

Social Media Bar

Kamlahaasan and Ilayaraja: தமிழில் உள்ள இசையமைப்பாளர்களிலேயே அதிகமாக மக்களால் அறியப்பட்ட ஒரு இசையமைப்பாளர் என்றால் அது இளையராஜாதான். பொதுவாக கதாநாயகர்களுக்காக இயக்குனர்களுக்காக சில திரைப்படங்கள் ஓடிப் பார்த்திருப்போம்.

ஆனால் இளையராஜாவின் இசைக்காக திரைப்படம் ஓடிய காலம் உண்டு அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தவர் இளையராஜா. நடிகர் ராஜ்கிரன் கூட திரைப்படம் இயக்க துவங்கிய பொழுது படத்திற்கான பேனர்கள் மற்றும் போஸ்டர்களை அடிக்கும் பொழுது அதில் இளையராஜாவின் புகைப்படத்தைதான் பெரிதாக வைப்பாராம்.

அதை பார்த்துவிட்டு மக்கள் படத்தை பார்க்க வருவார்கள் என்பதற்காக அப்படி செய்வாராம். அந்த அளவிற்கு பிரபலமாக இருந்தவர் இளையராஜா. இளையராஜாவின் பல பாடல்களில் நடிகர் கமல்ஹாசன் பாடல்களை பாடியுள்ளார்.

ஒருமுறை அவரை மேடைக்கு அழைத்த இளையராஜா அவரை புகழும் வண்ணம் பேசி இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது கமல்ஹாசனுக்கு நன்றாக பாட தெரியும் இசையை பொருத்தவரையில் அவருக்கு ராகத்தின் பெயர்கள் கூட தெரியும் என்று கூறினார் .

kamalhaasan
kamalhaasan

அதைக் கேட்ட கமல்ஹாசன் என்னை அவமானப்படுத்துவதற்காகவே நீங்கள் இந்த மேடையில் ஏற்றி இருக்கிறீர்கள் என நினைக்கிறேன் என்று நேரடியாகவே கூறிவிட்டார். அதற்கான காரணத்தை கமல்ஹாசன் கூறும் பொழுது ஓரளவு எனக்கு பாட தெரியும் என்றாலும் இசையை குறித்து எனக்கு பெரிதாக எந்த ஒரு அறிவும் கிடையாது.

அதனால் என்னால் இங்கு பாட முடியாது என்று கூறிவிட்டார். அந்த மேடையில் கடைசி வரை கமல்ஹாசன் பாடவே இல்லை இளையராஜா பலமுறை வற்புறுத்தியும் கூட கமல்ஹாசன் அதை நிராகரித்து விட்டார்.

To Top