Cinema History
படத்தோட கதையே கேட்காமல் இளையராஜா இசையமைத்த படம்! – ஆனால் எல்லா பாட்டு ஹிட்டு..!
தமிழில் இசைஞானி, இசை மேதை என பலராலும் பாராட்டப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களில் 6000க்கு மேற்பட்ட பாடல்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.
அதில் சில படங்களில் பாடல்கள் இன்னுமமும் கூட மக்களால் அதிகமாக கேட்கப்பட்டு வரும் பாடலாக உள்ளன. அதில் மிக முக்கியமான ஒரு திரைப்படம் ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன். இந்த படத்தை இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன் இயக்கினார்.
படத்திற்கு இசை அமைப்பதற்காக இளையராஜாவை சந்தித்துள்ளார் கங்கை அமரன். அண்ணா நான் ஒரு படம் பண்றேன். படம் பேரு கரகாட்டக்காரன் என கூறியுள்ளார். கரகம் ஆடுறதை வச்சி என்னடா படம் எடுக்க போற? என அந்த படம் மீது ஆர்வம் இல்லாமல் கேட்டுள்ளார் இளையராஜா.
எடுத்துருக்கேன். நல்லா வந்துருக்கு. படத்துக்கு பாட்டு மட்டும் நீங்க பண்ணி கொடுத்துருங்க அண்ணே என கங்கை அமரன் கேட்க இளையராஜாவும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் அதற்கென்று தனியாக கால்ஷீட் ஒதுக்க முடியாது. அதனால் நான் ஃப்ரியாக இருக்கும்போது ஒவ்வொரு பாடலாக வாங்கி கொள் என கூறியுள்ளார் இளையராஜா.
அதே போல கங்கை அமரனும் ஒவ்வொரு பாடலாக வாங்கியுள்ளார். ஒவ்வொரு முறை பாடலை கேட்கும்போதும் பாடலுக்கான தருணத்தை மட்டும் சொல்லி பாடலை வாங்கி வந்தார் கங்கை அமரன். இதனால் படம் வெளியாகும் வரை இளையராஜாவிற்கு படத்தின் கதையே தெரியவில்லை. அதை தெரிந்துகொள்ள அவர் ஆர்வம் காட்டவும் இல்லை.
இறுதியாக படம் வெளியானது. படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இருந்தன. மாங்குயிலே பாடல் இருமுறை, இந்த மான், மாரியம்மா என படத்தில் வந்த அனைத்து பாடல்களுமே ஹிட். படமும் ப்ளாக் பஸ்டர் ஹிட்.
இளையராஜா படக்கதையே கேட்காமல் இசையமைத்து இப்படி ஒரு ஹிட் கொடுத்த படம் கரகாட்டக்காரன் திரைப்படம்தான்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்