இந்தியாவில் கால் பதிக்கும் எலான் மஸ்க்.. இனி கிராமத்திலும் இணைய வசதி..! கட்டண விபரம் இதோ.!

இணையதள வசதி என்பது தொடர்ந்து நாளுக்கு நாள் ஒரு வளர்ச்சியை கண்டு கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் இப்பொழுதும் சிம்கார்டு நிறுவனங்கள் தான் இந்தியாவில் இணையதள வசதியை வழங்கி வருகின்றன.

இதனால் பெரும்பான்மையான கிராமங்களில் இணையவசதி இப்பொழுதும் சரியாக கிடைப்பதில்லை. ஏனெனில் செல்போன் டவர் வழியாக தான் இணைய வசதி என்பது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இதன் அடுத்த தொழில்நுட்பமாக சேட்டிலைட் வழி இணைய வசதியை பல்வேறு நாடுகள் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தியாவில் கூட ஏர் பைபர் என்கிற தொழில்நுட்பம் மூலமாக இணையத்தை வழங்கி வருகின்றனர்.

Social Media Bar

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள ஸ்டார்லிங்க் நிறுவனம் சாட்டிலைட் வழியாக இணைய வசதியை வழங்கி வருகிறது. எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் உலகம் முழுவதுமே இணைய வசதியை வழங்க திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் இந்தியாவிலும் வழங்குவதற்கு வெகு நாட்களாகவே அனுமதி கேட்டு வந்தது. இந்த நிலையில் தற்சமயம் ஸ்டார் லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்திருக்கிறது.

எனவே இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய வசதியை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. மற்ற நாடுகளில் அதிகமாக இணைய கட்டணத்தை வசூல் செய்தாலும் கூட இந்தியாவில் குறைவாக மாதம் 800 ரூபாய் இணைய கட்டணமாக வசூலிக்க திட்டமிட்டுள்ளதாம் ஸ்டார்லிங் நிறுவனம்.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.