Tamil Cinema News
கொடுத்த சத்தியத்தை மீற முடியல.. மியூசிக்கை விட இதுதான் காரணம்.. உண்மையை கூறிய விஜய் ஆண்டனி..!
ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான உடனேயே தொடர்ந்து ஹிட் பாடல்களாக கொடுத்து வந்தவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. சினிமாவில் அவருக்கென்று ஒரு இடம் கிடைத்தப்போது இசையமைப்பாளர் வேலையை விட்டு விட்டு நடிக்க சென்றுவிட்டார்.
ஒரு நடிகராக சம்பளம் அதிகமாக கிடைத்ததால் விஜய் ஆண்டனி அதையே பின்பற்ற துவங்கினார். இந்த நிலையில் அவர் இசையமைப்பாளர் வேலையை விட்டது குறித்து சமீபத்தில் பேசியுள்ளார். அதில் அவர் கூறும்போது வேலாயுதம் திரைப்படத்திற்கு முன்பு வரை நான் குறைவான சம்பளம்தான் வாங்கி வந்தேன்.
வேலாயுதம் திரைப்படத்தில்தான் 1 கோடி ரூபாய் முதன் முதலாக சம்பளமாக வாங்கினேன். ஆனால் அதற்கு இரண்டு வருடங்கள் முன்பே நடிகராக நடிப்பதாக சத்தியம் செய்து கொடுத்திருந்தேன்.
வேலாயுதம் திரைப்படத்திற்கு பிறகு வரிசையாக எனக்கு ஹிட் பாடல்களாக அமைந்தன. ஆனால் செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக நான் நடிக்க சென்றுவிட்டேன் என கூறியுள்ளார் விஜய் ஆண்டனி.
