இந்தியாவின் பிரபல பாடகர் கே.கே மரணம் –  திரை துறையினர் அஞ்சலி

இந்தியாவில் உள்ள பிரபல பிண்ணனி பாடகர்களில் முக்கியமானவர் கே.கே என்கிற கிருஷ்ணகுமார் குன்னத். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடிசா, பெங்காலி, அசாமி, குஜராத்தி என இந்தியாவின் பல மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.

அரிதாக சில பாடகர்களே இப்படி இந்தியா முழுவதும் பல மொழிகளில் பாடல்களை பாடியுள்ளனர்.

இவர் நேற்று கல்கத்தாவில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு உடல் நலத்தில் பிரச்சனை ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார்.

எனவே உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை சோதித்த மருத்துவர், அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். கே.கேவின் திடீர் மறைவு திரை துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திடீரென ஏற்பட்ட இந்த மரணத்திற்கு திரை துறையினரில் துவங்கி பிரதமர் நரேந்திர மோடி வரை பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவர் தமிழில் காதல் தேசம், காக்க காக்க, அந்நியன், மன்மதன், திருப்பாச்சி ஆகிய படங்களில் பாடல்களை பாடியுள்ளார். 

அடுத்து லெஜண்ட் சரவணா நடித்து வெளிவர இருக்கும் லெஜண்ட் படத்திலும் இவர் ஒரு பாடலை பாடியுள்ளார்.

Refresh