சேனாபதி புதிய லுக் – இந்தியன் 2 புது போஸ்டர்கள்!

நடிகர் கமல் நடித்து 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். இந்திய அளவில் ஒரு வரவேற்பை பெற்ற படமாக இது இருந்தது. இதில் கமல் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

Social Media Bar

லஞ்சம் வாங்கும் ஊழியர்களை கொலை செய்யும் இந்தியன் எனும் சேனாபதி படத்தின் இறுதி காட்சிகளில் தப்பிவிட்டதாக வரும். பிறகு வெளிநாட்டில் அவர் இருப்பதாக காட்டப்படும். அதை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை எடுத்து வருகின்றனர்.

இந்த படத்தில் ஒரே ஒரு கமல் மட்டுமே.. சேனாபதி என்கிற அந்த ஒரு கதாபாத்திரம் மட்டுமே வருகிறது என கூறப்படுகிறது. கொரோனாவால் படப்பிடிப்பு எடுக்க முடியாமல் போனதால் வெகுநாட்களாக தயாராகி வருகிறது இந்த படம். 

இந்நிலையில் இன்று நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியன் படத்தின் புதிய ப்ரோமோ போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

இந்தியன் படத்தை இயக்கிய இயக்குனர் சங்கர்தான் இந்த படத்தையும் இயக்குகிறார். எனவே படத்திற்கு வரவேற்பு அதிகமாகி வருகிறது.