News
கமல் மணிரத்னம் கூட்டணியில் அடுத்த படம்..! – ரஜினியும் கூட இருக்கார் போல?
இயக்குனர் மணிரத்னம் இயக்கி கமல் நடித்து 1987 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நாயகன். கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்றும் மணிரத்னம் திரைப்படத்தில் முக்கியமான திரைப்படமாக நாயகன் உள்ளது.
இந்த நிலையில் வெகுகாலங்களுக்கு பிறகு தற்சமயம் மீண்டும் மணிரத்னமும் கமல்ஹாசனும் கூட்டணி சேர உள்ளனர்.

இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் சேர்ந்து தயாரிக்க உள்ளது. ஏ.ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இது கமலுக்கு 234 ஆவது படம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தும் கூட திரைப்படம் நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் இருந்தன. இதற்காக இருவரும் சந்தித்து பேசிக்கொண்டதாக கூறப்பட்டது. எனவே ரஜினிகாந்தும் கூட இந்த படத்தில் நடிக்கிறாரோ? ஒருவேளை கமல் ரஜினி இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கும் படமாக இது இருக்குமோ? என்கிற கேள்வி வருகிறது.
அப்படி ஒருவேளை இது இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் படமாக இருக்கும் பட்சத்தில் தமிழில் அடுத்த வசூல் சாதனை படைக்கும் படமாக இது இருக்கும்.
