Connect with us

பயத்தில் உறையவைக்கும் பேய் படங்கள்.. மிரட்டும் 5 இந்தோனிசிய பேய் படங்கள்!..

horror movie

Hollywood Cinema news

பயத்தில் உறையவைக்கும் பேய் படங்கள்.. மிரட்டும் 5 இந்தோனிசிய பேய் படங்கள்!..

Social Media Bar

பேய் படங்களை பொறுத்தவரை கொரியா, தாய்லாந்து, இந்தோனிசியா ஆகிய நாடுகளில் வருகிற படங்கள்தான் பலரையும் பதை பதைக்க வைக்கும் திரைப்படங்களாக இருக்கின்றன.

அப்படியாக இந்தோனிசியாவில் பலருக்கும் பயத்தை ஏற்படுத்தும் சில பேய் படங்கள் வந்துள்ளன. அந்த படங்கள் பற்றியும், அவற்றின் கதையையும் இப்போது பார்க்கலாம்.

Joko Anwar’s Nightmares and Daydreams:

இந்த திரைப்படம் சாதாரண மக்களுக்கு ஏற்படும் விசித்திரமான நிகழ்வுகளை குறித்து பேசுகிறது. நல்லப்படியான தூக்கம் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஆனால் எப்போது தூங்கினாலும் உங்களுக்கு கெட்ட கனவு மட்டுமே வந்தால் எப்படியிருக்கும்.

உங்களால் தூங்கவே முடியாது இல்லையா. இப்படி தூக்கத்தின் வழியாக தொல்லை செய்யும் துர் சக்தியை பற்றிய கதைதான் இந்த படம்.

Sekawan Limo

ஒரு இளைஞர் கூட்டம் செய்யும் தவறை கதையாக வைத்து இந்த படம் செல்கிறது. பகாஸ், லென்னி, டிக்கி, ஜூனா ஆகிய நால்வரும் ஒரு மலைக்கு செல்கின்றனர். அங்கு அவர்கள் செய்த ஒரு தவறால் அந்த மலையில் இருக்கும் தீய சக்தி எழுப்பப்படுகிறது.

இப்போது அது அந்த கூட்டத்தில் இருக்கும் ஒரு நபர் உடலில் புகுந்துவிட்டது. ஆனால் யார் மீது பாய்ந்துள்ளது என யாருக்குமே தெரியாது. இந்த நிலையில் அதனிடம் இருந்து உயிர் தப்பிப்பதே கதையாக இருக்கிறது.

Kuyang

குயாங் என்கிற தீய சக்தியை குறித்த கதையை கொண்டுள்ளது இந்த படம். இந்த பேய் கர்ப்பிணி பெண்களின் உடலில் நுழைந்து அவர்களது கருவை உறிஞ்சிவிடும் சக்தி கொண்டது. இந்த நிலையில் இதன் தாக்குதலால் தனது தாய் இறந்துவிட ஒரு இளம்பெண் இந்த பேயை தேடி போவதை வைத்து கதை செல்கிறது.

Munkar

முங்கார் என்பதும் ஒரு பேயின் பெயரே ஆகும். இந்த பேய் இறந்தவர்களின் ஆத்துமாக்களை சாப்பிடக்கூடியது. அதன் மூலம் அவர்களை தனது அடிமையாக்கி கொள்கிறது. இந்த நிலையில் ஒரு இளைஞர்கள் குழு மன நல மருத்துவமனையில் உள்ள சிலர் வித்தியாசமாக இருப்பதை அறிந்து அதுக்குறித்து ஆய்வு செய்யும்போது முங்கார் அதற்கு காரணமாக இருப்பதை அறிகின்றனர். அதை வைத்து கதை செல்கிறது.

The Corpse Washer

இறந்த பெண்ணின் உடலில் இருந்து வரும் அமானுஷ்ய சக்தி ஒருவனை கட்டுப்படுத்தி கொலைக்காரனாக மாற்றுகிறது. அதை வைத்து இந்த படத்தின் கதை செல்கிறது.

Continue Reading
Advertisement
You may also like...

Articles

parle g
madampatty rangaraj
To Top