Latest News
அப்பா இறந்தப்பிறகு அந்த சூப்பர் ஸ்டார் நடிகர் போன் பண்ணுனார்.. நடிகைக்கு வந்த டார்ச்சர்!.. அம்பலமாகும் உண்மைகள்!.
சினிமா துறையில் நடித்து வரும் பல நடிகைகளுக்கு தற்போது அட்ஜஸ்ட்மெண்ட் பற்றிய பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பித்து இருக்கிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல நடிகைகளும் தைரியமாக பேட்டிகளில் முன் வந்து இந்த போன்ற பிரச்சனைகளை தாங்கள் கடந்து வந்ததாகவும் தெரிவித்து அது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.
மேலும் ஒரு சிலர் சினிமா என்றால் இது போன்ற விஷயங்கள் நடக்கத்தான் செய்யும் என சர்வ சாதாரணமாக கூறினாலும், பெண்களுக்கு சினிமா மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் இதுபோன்ற பிரச்சனைகள் தலை தூக்க ஆரம்பித்திருக்கிறது.
ஆனால் சினிமாவில் நடிகைகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல நபர்களிடமிருந்து இது போன்ற பிரச்சனைகள் வருவதால் அவர்கள் தற்போது பேட்டிகளில் தைரியமாக முன்வந்து கூறுகிறார்கள்.
இந்நிலையில் மலையாள சினிமாவே அதிர்ச்சிக்கு உள்ளாய் இருக்கும் ஒரு சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஹேமா கமிட்டி
மலையாள சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு வன்கொடுமைக்கு ஆளானார். இந்த செய்தி மலையாள சினிமா மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த திரை உலகத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும் அந்த நடிகை கடத்தப்பட்ட வழக்கில் பிரபல நடிகர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் பேசப்பட்டு வந்தது மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.
அந்த சம்பவத்திற்கு பிறகு கேரளா அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் ஹேமா கமிட்டி என்னும் ஒரு கமிட்டியை ஆரம்பித்து அதன் மூலம் புகார்களை பதிவு செய்து வந்தது. இந்நிலையில் அந்த கமிட்டியின் மூலம் வெளிவந்த அறிக்கையில் பல நடிகைகளும் தங்களுக்கு ஏற்பட்ட புகார்களை பதிவு செய்ததன் மூலம் தற்போது மலையாள சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களின் தலைமையில் இது நடப்பது போன்ற பல விஷயங்கள் கசிந்தன.
இந்நிலையில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ஒருவர் மறைந்த நடிகர் ஒருவரின் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருப்பதும், அந்த நடிகரின் மகளே வெளிப்படையாக கூறி இருப்பதும் தற்போது கேரளா சினிமாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
மறைந்த நடிகர் திலகன் மகள் சோனியா திலகன் அளித்த புகார்
மறைந்த நடிகர் திலகனின் மகள் சோனியா திலகன் அவருக்கு நேர்ந்த துன்புறுத்தல் அனுபவத்தை ஹேமா கமிட்டியின் மூலம் கூறி தற்போது அந்த அறிக்கை வெளிவந்திருக்கிறது. இந்நிலையில் அவர் கூறும் போது என் தந்தை இறந்த பிறகு அந்த நடிகரிடம் இருந்து பலமுறை எனக்கு போன் வந்ததாகவும், அவர் என்னை தனியாக வந்து அறையில் சந்திக்குமாறும் கூறினார். அப்போது அவரின் நோக்கம் என்னவென்று எனக்குப் புரிந்தது.
மேலும் திரைத்துறையை சாராத எனக்கே இந்த நிலைமை என்றால், சினிமா துறையில் நடிக்கும் நடிகைகளுக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் என கேள்விகளை முன் வைத்திருக்கிறார். தேவைப்பட்டால் அவரின் பெயர் மற்றும் விவரங்களை வெளியிடவும் தயாராக இருப்பதாக சோனியா திலகன் கூறியிருப்பது தற்போது கேரளா சினிமாவை அதிர செய்து இருக்கிறது.
மேலும் ஹேமா கமிட்டியின் மூலம் எந்தெந்த நடிகர்கள் சிக்குவார்கள் என தற்போது அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்