Latest News
வீடியோவால் வந்த வினை!.. மஞ்சு வாரியர் மீது புகார்.. பற்றி எரியும் மலையாள சினிமா..
ஒரு படம் உருவாகிறது என்றால் அதற்கு பல முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு அந்த படத்திற்கான பல வேலைகள் தயார் செய்யப்பட்டு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். மேலும் அந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் பலரின் பாதுகாப்பிற்கு ஏற்றபடி தான் ஒரு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்.
இந்நிலையில் எவ்வளவு பெரிய முன்னணி நடிகராக இருந்தாலும் சண்டைக்காட்சி அல்லது பல ஸ்டன்ட் செய்வது போன்ற காட்சிகளில் டூப் வைத்து நடிப்பார்கள். ஏனென்றால் பயிற்சி பெறாமல் எந்த ஒரு ரிஸ்க் எடுத்தால் அது அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்.
இந்நிலையில் தான் மலையாள சினிமா உலகில் பிரபலமாக இருந்து வரும் நடிகை மஞ்சு வாரியர். இவர் அவரின் தயாரிப்பில் ஒரு படம் ஒன்றை தயாரித்துக் கொண்டிருக்கும் போது அந்த படத்தில் நடித்த சக நடிகைக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக தற்போது அந்த நடிகை நோட்டீஸ் அனுப்பி இருப்பது மலையாள சினிமாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
நடிகை மஞ்சு வாரியர்
மலையாள சினிமா மட்டுமல்லாமல் தமிழிலும் பிரபல நடிகையாக அறியப்பட்டு வருபவர் மஞ்சு வாரியர். பல முன்னணி நடிகர்களுடன் மலையாளத்தில் நடித்த மஞ்சு வாரியர் தமிழில் துணிவு, அசுரன் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு இடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
தற்போது இவர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல படங்களில் நடிகையாகவும் முக்கியமாக தயாரிப்பாளராகவும் மஞ்சு வாரியர் மலையாள சினிமாவில் தவிர்க்க முடியாத நபராக இருந்து வருகிறார்.
மஞ்சு வாரியருக்கு வந்த சிக்கல்
தற்போது மஞ்சு வாரியர் அவரின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஃபுட்டேஜ் என்னும் திரைப்படத்தை தயாரித்து வருகிறார். கிரைம் மற்றும் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் சீதள் தம்பி என்னும் நடிகை நடித்து வருகிறார்.
இந்த படத்தின் சண்டைக் காட்சி ஒன்று காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்ட போது அதில் ஆக்சன் காட்சி ஒன்றில் சீதள் தம்பி நடித்ததாக கூறப்படுகிறது.
படப்பிடிப்பின் போது சீதள் தம்பிக்கு ஏற்பட்ட காயத்தால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் பல மாதங்களாக சிகிச்சை மேற்கொண்டு வந்த சீதள் தம்பிக்கு எந்த ஒரு இழப்பீடும் தயாரிப்பு நிறுவனம் வழங்கவில்லை என்றும் இதுவரை 1.80 லட்சம் மட்டுமே தயாரிப்பு நிறுவனம் கொடுத்துள்ளதாகவும் காலில் ஏற்பட்ட காயம் வாழ்நாள் முழுவதும் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் அவரின் திரையுலக வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கிறது எனவும், சீதள் தம்பி தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுப்பி உள்ள நோட்டீஸில் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படபிடிப்பு தளத்தில் எந்த ஒரு பாதுகாப்பு ஏற்பாடும் செய்யாதது தான் என்னுடைய இந்த நிலைமைக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் என்னுடைய எதிர்கால வாழ்க்கைக்கு ரூபாய் 5.75 கோடி ரூபாய் நஷ்ட ஈடு இழப்பீடாக கொடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார். இவ்வாறு கொடுக்காத பட்சத்தில் நான் சட்ட ரீதியாக நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளேன் என அவர் அந்த நோட்டீஸில் தெரிவித்திருக்கிறார்.
தற்போது இந்த பிரச்சனை மஞ்சு வாரியருக்கு பெரும் தலைவலியாக அமைந்திருக்கிறது என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து கொள்கிறார்கள்.