Connect with us

ரஜினி படப்பிடிப்பில் பாம் வைத்த மர்ம நபர்.. அரண்டு போன படப்பிடிப்பு தளம்!.

rajinikanth

News

ரஜினி படப்பிடிப்பில் பாம் வைத்த மர்ம நபர்.. அரண்டு போன படப்பிடிப்பு தளம்!.

Social Media Bar

Rajinikanth: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் பல வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். இவரின் படங்கள் வெளியாக போகிறது என்றால் அன்றைய தினம், இவரின் ரசிகர்களுக்கு தீபாவளி தான்.

இவர் தன்னுடைய ஸ்டைலான நடிப்பின் மூலம் உலகில் பல கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி இருக்கிறார். அவ்வாறு அவர் நடித்த உழைப்பாளி படத்தைப் பற்றிய ஒரு பரபரப்பான செய்தி ஒன்று சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

உழைப்பாளி திரைப்படம்.

உழைப்பாளி திரைப்படம் இயக்குனர் பி வாசு இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த், ராதாரவி, ரோஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

மேலும் உழைப்பாளி படம் வெளியாகும் பொழுது விநியோகஸ்தர்கள் சங்கம் ரஜினியின் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதித்திருந்தது. அதனால் யாரும் படத்தை வாங்க முன் வரவில்லை.

rajini

அதன் பிறகு ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசனை அழைத்து இதைப் பற்றி கூறினார். பிறகு இருவரும் கலந்து பேசி வினியோஸ்தகர்கள் ஆதரவு இல்லாமல் படம் நாளை வெளியிடப்படும் என அறிவித்தார்கள். இந்த நிகழ்வு அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் இந்த படம் வினியோஸ்தகர்கள் ஆதரவு இன்றி 100 நாட்களுக்கு மேலாக திரையரங்கில் ஒடி சாதனை படைத்தது.

உழைப்பாளி படப்பிடிப்பில் பாம் வைத்த நபர்

உழைப்பாளி படத்தை பற்றி ஒரு நேரலையில் பகிர்ந்த நந்தகுமார், உழைப்பாளி படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று காவல் அதிகாரிகளும், நாய்களும் படப்பிடிப்பு தளத்தை நோக்கி விரைந்தனர்.

அப்பொழுது கடைப்பிடிப்பில் பாம் இருப்பதாக கூறியதால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் தெரித்து ஓடி விட்டார்கள். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த தகவல் பொய்யானதால் மதியத்திற்கு மேல் படப்பிடிப்பு நடைபெற்றது எனக் கூறியிருக்கிறார்.

இவ்வாறு பல தடைகளை தாண்டி உழைப்பாளி திரைப்படம் வெளியாகும் பொழுது ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இந்த திரைப்படம் தற்பொழுது வரை மக்கள் மனதை விட்டு நீக்காமல் உள்ளது.

Articles

parle g
madampatty rangaraj
To Top