அந்த மக்களை பார்த்துதான் உண்மையான வாழ்க்கையை கத்துக்கிட்டேன்.. மணிகண்டனுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தை சொல்லி கொடுத்த நிகழ்வு!.

தமிழில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவராக இருந்து வருகிறார் நடிகர் மணிகண்டன். இவருக்கு ஜெய் பீம் திரைப்படம் முக்கியமான திரைப்படம். அதற்கு முன்பு காலா மாதிரியான திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கூட ஜெய் பீம் திரைப்படத்தில்தான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் மணிகண்டன்.

அந்த படத்தின் மூலமாக பிறகு குட் நைட் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. குட் நைட் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த லவ் டுடே திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். மணிகண்டன் தற்சமயம் தனது சம்பளத்தையும் நான்கு கோடியாக அவர் உயர்த்தி இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

manikandan
manikandan
Social Media Bar

இந்த நிலையில் ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கும்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். அதில் கூறும் பொழுது பழங்குடியின மக்களாக நான் நடிக்க இருந்ததால் பழங்குடியின மக்களோடு சேர்ந்து வாழ்ந்து பார்த்தால்தான் அந்த கதாபாத்திரத்தில் சரியாக நடிக்க முடியும் என்று இயக்குனர் என்னை அந்த மக்களோடு வாழ விட்டார்.

அப்பொழுதுதான் அந்த மக்கள் எவ்வளவு வறுமையில் தங்களது வாழ்க்கையை நடத்துகின்றனர் என்பதே எனக்கு புரிந்தது. ஒரு மாதம் அந்த மக்களுடன் நான் வாழ்ந்து வந்தேன். எந்த ஒரு விஷயமும் அவர்களிடம் இல்லை என்றாலும் கூட அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்.

அப்போதுதான் ஒரு விஷயம் எனக்கு புரிந்தது. மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் ஏதாவது ஒன்று கிடைத்தால்தான் நமக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்று அர்த்தம் இல்லை. முதலில் நாம் மனதில் நினைக்க வேண்டும் நாம் மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என்று அப்பதான் நமக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும் இவ்வளவு துன்பங்களுக்கு இடையில் இவர்களே மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது நாம் ஏன் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்பதுதான் எனக்கு அப்பொழுதைய கேள்வியாக இருந்தது என்று கூறுகிறார் மணிகண்டன்.