Connect with us

அமெரிக்காவில் ரெக்கார்டு ப்ரேக் செய்த ஜெயிலர்!.. வசூல் நிலவரமே கலவரமா இருக்கே..

News

அமெரிக்காவில் ரெக்கார்டு ப்ரேக் செய்த ஜெயிலர்!.. வசூல் நிலவரமே கலவரமா இருக்கே..

Social Media Bar

தமிழ் திரையுலகில் எப்போதுமே சூப்பர் ஸ்டார் என பலராலும் அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவில் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து இந்த நிலையை அடைந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். எனவே அவரது சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்திற்கு யாராவது போட்டியாக வந்தால் அதை ரஜினியால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

ரஜினி நடித்து கடந்த வருடம் வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வெற்றியை பெறவில்லை. அதனை தொடர்ந்து அடுத்த படம் வெற்றி படமாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனத்துடன் இருந்தார் ரஜினி.

அதே போல இயக்குனர் நெல்சனுக்கும் அவர் இயக்கி வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதனை தொடர்ந்து நெல்சனுக்குமே ஜெயிலர் முக்கியமான படமாக இருந்தது. இந்த நிலையில் இவர்கள் இருவரையுமே ஜெயிலர் படம் காப்பாற்றிவிட்டது என்றே கூறலாம். ஏனெனில் அந்த அளவிற்கு படம் நல்ல வசூலை பெற்றுள்ளது.

இந்தியா முழுவதும் ஜெயிலர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வெளிநாடுகளிலும் அதிக வசூலை செய்து வரும் ஜெயிலர் திரைப்படம் அமெரிக்காவில் மட்டும் 1 மில்லியன் டாலருக்கும் அதிகமாக ஓடியுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் ஜெயிலர் ரஜினிக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்துவிட்டது.

To Top