தமிழில் பழைய நடிகர்களில் பிரபலமானவர் நடிகர் ஜெய்சங்கர். 1960 களிலேயே கோர்ட் சூட் போட்டுக்கொண்டு ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் கதாநாயகர்கள் போல சுற்றி வந்தவர் ஜெய்சங்கர்.
மேலும் உலக சினிமாக்களில் வரும் டிடெக்டிவ், கெளபாய் போன்ற கதைகளை தேர்ந்தெடுத்து அதை தமிழ் சினிமாவிற்கு இவர் அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் நல்ல பெயர் வாங்கியவர் ஜெய்சங்கர்.
பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு படம் நடித்து கொடுத்து நல்ல பெயர் வாங்கியவர். ஆனால் அவர் தெரியாதனமாக ஒருமுறை செய்த தவறு பிறகு சரி செய்யப்படவே இல்லை. 1969 ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளிவந்து பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் பூவா தலையா.
இந்த படத்தில் வெண்ணிற ஆடை நிர்மலா இவருடன் நடித்திருந்தார். ஒரு காட்சியில் ஜெய்சங்கர் புத்தகத்தை எடுத்து நிர்மலா மீது வீச வேண்டும். அப்படி வீசும்போது நிர்மலாவின் கண்ணில் அதுப்பட்டு அவரது கண் பாதிப்படைந்தது. அப்போதைய தொழில்நுட்பத்தில் எவ்வளவு சிகிச்சை செய்தும் அந்த கண்ணை சரி செய்ய முடியவில்லை.
அந்த கண் சற்று மங்கலாகவே நிர்மலாவிற்கு தெரிந்து வந்தது. இந்த நிலையில் 53 வருடங்களுக்கு பிறகு இதுக்குறித்து நிர்மலாவிற்கு போன் செய்துள்ளார் ஜெய்சங்கரின் மகனான டாக்டர் விஜய் சங்கர். உங்க கண்ணில் இருக்கும் பிரச்சனையை நான் சரி செய்கிறேன் என கூறி நிர்மலாவை அழைத்து சென்று அவரது பார்வையை சரி செய்துள்ளார்.
இதற்காக நிர்மலா விஜய் சங்கருக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார்.






