Tamil Cinema News
தளபதி 69 படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்.. கண்டிப்பா அரசியல் படம்தான்..! இதை கவனிச்சீங்களா..!
நடிகர் விஜய்யின் கடைசி படத்திற்காக ஒரு மாபெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு தொடர்ந்து 69 ஆவது திரைப்படத்தோடு திரைத்துறையை விட்டு விலக போவதாக அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து கடைசி திரைப்படம் மீது தானாகவே ஒரு எதிர்பார்ப்பு உண்டாகிவிட்டது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். ஹெச்.வினோத்தை பொறுத்தவரையில் அவர் இயக்கும் திரைப்படங்களில் படம் சார்ந்த பல விஷயங்களை ஆய்வு செய்து படத்தில் வைத்துவிடுவார்.
இந்த நிலையில் அவர் கையில் தளபதி 69 திரைப்படம் வந்திருப்பது ஒருப்பக்கம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்து வருகிறது. நடிகை பூஜா ஹெக்தே, மமிதா பைஜு இருவரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த திரைப்படத்திற்கு என்ன பெயர் வைக்க போகிறார்கள் என்கிற கேள்வி பலருக்கும் இருந்து வந்தது. இந்த படத்திற்கு நாளைய தீர்ப்பு என்று பெயர் இருக்கும் என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வந்தன. ஆனால் தற்சமயம் வெளியான அப்டேட்டின் படி படத்திற்கு ஜன நாயகன் என பெயரிடப்பட்டுள்ளது.
ஜனங்களுக்கான நாயகன் என்பதை குறிப்பிடும் வகையில் இந்த டைட்டில் அமைந்துள்ளது. அதன் போஸ்டரில் விஜய் மக்களை திரட்டி செல்பி எடுப்பதாக புகைப்படம் அமைந்துள்ளது. பொதுவாகவே விஜய் ரசிகர்களை சந்திக்கும்போது செல்பி எடுப்பார் என்பது பலரும் அறிந்த விஷயமே.
அதனை காட்டும் வகையில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மக்கள் எதிர்பார்த்தது போலவே இது ஒரு அரசியல் படமாக அமைந்துள்ளது.
