Janhvi Kapoor: ஒரு சில நடிகைகளை நாம் நிச்சயம் மறக்க இயலாது. அந்த வகையில் தமிழ் சினிமா மூலம் பாலிவுட்டிற்கு சென்று சாதித்த ஒரு நடிகையின் மகள் தற்பொழுது அவரைப் போல சினிமா துறையில் சாதிக்க தொடங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் யாரும் மறுக்க முடியாத ஒரு நடிகை என்றால் அவர் ஸ்ரீதேவி.
தமிழ் சினிமாவில் தொடங்கிய தன்னுடைய வாழ்க்கையை பாலிவுட் வரை கொண்டு சென்று திரையுலகமே வியந்து பார்க்க வைத்த ஒரு நடிகை ஆவார்.
அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தது திரையுலகினரையும், அவர் ரசிகர்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. அந்த வகையில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்பொழுது சினிமா துறையில் சாதிக்க தொடங்கி இருக்கிறார். அவர் சமீபத்தில் செய்த சம்பவம் ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஜான்வி கபூர்
ஜான்வி கபூர் பிரபல தயாரிப்பாளரானபோனி கபூர் மற்றும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இவர் முதலில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தடக் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இது வணிகரீதியான வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு வந்த படங்கள் அவருக்கு தோல்வியில் முடிந்தன.

தற்பொழுது பல படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். இவரின் அவரின் தாயார் தென்னிந்தியாவில் அதிக படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் ஜான்வி கபூர் இதுவரை தென்னிந்திய படங்களில் அறிமுகமாகவில்லை. ஆனால் தற்பொழுது தெலுங்கில் தேவார என்ற படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். அடுத்ததாக இவர் தமிழ் படங்களிலும் தோன்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜான்வி கபூர் செய்த சம்பவம்
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கிளாமரான உடையில் வந்திருந்தார் ஜான்வி கபூர். அவரை பல புகைப்பட கலைஞர்கள் படம் எடுக்கும் பொழுது, ஒரு புகைப்பட கலைஞர் மட்டும் தன்னுடைய கேமரா ஆங்கிளை மோசமாக வைத்து எடுக்கப்பட்டதை உணர்ந்தார். ஜான்வி கபூர் கோபப்பட்டு கேமரா ஆங்கிள் மோசமாக வைத்து என்னை போட்டோ எடுக்காதீர்கள் என கூறினார். இது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.






