Latest News
ஏமாற்றத்தை கொடுத்ததா ஜப்பான்!.. ஜப்பான் முழு விமர்சனம்!..
சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதைகளங்களை தேர்ந்தெடுத்து திரைப்படமாக்குபவர் இயக்குனர் ராஜ் முருகன். இவர் இயக்கிய குக்கூ, ஜோக்கர், மெஹந்தி சர்க்கஸ் போன்ற திரைப்படங்கள் யாவும் சமூக கருத்துக்களை பேசும் வகையில் இருந்தது.
இந்த நிலையில் அவர் இயக்கி தற்சமயம் வெளியாகியிருக்கும் திரைப்படம் ஜப்பான். ஆனால் ஜப்பான் திரைப்படத்தை பொறுத்தவரை இந்த படத்தை முழுவதுமாக ஒரு கமர்ஷியல் திரைப்படமாக எடுத்துள்ளார் ராஜ் முருகன்.
வழக்கமான கமர்ஷியல் திரைப்படம் போலவே ஜப்பான் படம் உள்ளது.
படக்கதை:
படக்கதைப்படி கார்த்தி ஒரு பிரபலமான திருடன் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இந்த நிலையில் ராயல் கோல்டு என்னும் தங்க கடையில் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் காணாமல் போகின்றன. அந்த நகைகளை ஜப்பான் எனும் கார்த்திதான் திருடி இருப்பார் என போலீஸ் அவரை தேடுகிறது.
பாதி கதையில் போலீஸ் பிடியில் சிக்கிய ஜப்பான், நான் அவற்றை கொள்ளையடிக்கவில்லை. ஆனால் அந்த கொள்ளையடித்தது யார் என்று தெரியும் என்றும் கூறுகிறார் ஜப்பான்.
இந்த நிலையில் எப்படி அந்த தங்கத்தை கண்டறிகிறார்கள் என்பதே கதை.
விமர்சனம்:
படத்தில் கார்த்தி முக்கியமான கதாபாத்திரமாக இருந்தாலும் கூட இந்த கதையில் பிள்ளை படிப்புக்காக தங்கம் சேர்க்கும் ஒரு குடும்பம் உள்ளது. அவர்களே முக்கிய பாத்திரமாக பார்க்கப்படுகின்றனர். குறைவாக வந்தாலும் வழக்கமாக ராஜ் முருகன் படத்தில் வரும் கதாபாத்திரமாக அவர்கள் தெரிகின்றனர்.
படத்தின் ஓட்டத்தில் எந்த ஒரு சுறு சுறுப்பையும் பார்க்க முடியவில்லை. கதை மிகவும் மெதுவாக செல்கிறது. படத்தில் விஜய் மில்டன், சுனில் போன்ற கதாபாத்திரங்களுக்கு ஓரளவு முக்கிய கதாபாத்திரம் இருந்தாலும் சும்மா வைக்க வேண்டும் என கதாநாயகியின் கதாபாத்திரத்தை வைத்திருக்கின்றனர்.
பாதி படத்திற்கு பிறகு படத்தில் எதற்கு கதாநாயகி இருக்கிறார் என்றே புரியாத நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் ராஜ்முருகன் தன்னுடைய வழக்கமான ஸ்டைலிலேயே படம் எடுக்கலாம். கமர்சியல் படம் எடுக்கிறேன் என்று சுமாரான படத்தை கொடுத்திருக்க வேண்டாம் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்