Connect with us

ரஜினியே உதவினாலும் அஜித் விடுற மாதிரி இல்லை.. ஜேசன் சஞ்சய்க்கு கட்டம் கட்டும் எதிரணி..!

ajith jason sanjay

Tamil Cinema News

ரஜினியே உதவினாலும் அஜித் விடுற மாதிரி இல்லை.. ஜேசன் சஞ்சய்க்கு கட்டம் கட்டும் எதிரணி..!

Social Media Bar

நடிகர் விஜய் அரசியலுக்குப் போகும் அதே சமயத்தில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவிற்கு வர இருக்கிறார். ஜேசன் சஞ்சயை பொருத்தவரை தனது தந்தை என்னதான் பெரிய மாஸ் ஹீரோவாக இருந்தாலும் அவருக்கு ஒரு இயக்குனராக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்கிறது.

இத்தனைக்கும் ஒரு மாஸ் ஹீரோவுக்கு கிடைக்கும் சம்பளம் கண்டிப்பாக ஒரு இயக்குனருக்கு கிடைக்காது. இருந்தாலும் பணம் தேவையில்லை தான் விரும்பும் விஷயத்தை தான் செய்ய வேண்டும் என்று களத்தில் இறங்கி இருக்கிறார் ஜேசன் சஞ்சய்.

அவர் இயக்குனர் ஆவதற்காக படித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு கதையை எழுதிவிட்டார். அந்த கதைக்கு லைக்கா நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. அதை படமாக்கலாம் என்றும் லைக்கா நிறுவனம் கூறி இருக்கிறது.

ஜேசன் சஞ்சய் படம்:

ஓரளவு பட்ஜெட் தேவைப்படும் படம் என்பதால் லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதாக கூறி இருக்கிறது. ஆனால் இந்த சமயம் பார்த்து தொடர்ந்து லைக்கா நிறுவனத்திற்கு பெரிய படங்களை தயாரிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

இந்தியன் 2, லால் சலாம், விடாமுயற்சி, வேட்டையன் என்று எல்லாமே அதிகபட்ஜெட் படமாக இருந்ததால் ஜேசன் சஞ்சையின் திரைப்படத்திற்கு தயாரிப்பு செலவுகளை பார்த்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் லைக்கா நிறுவனம் ஜேசன் சஞ்சையை திரைக்கதையை மேம்படுத்தும் வேலைகளை பார்க்குமாறு கூறியிருந்தது.

jason sanjay

jason sanjay

இந்த நிலையில் ஏற்கனவே ஓடிய லால் சலாம் மற்றும் இந்தியன் 2 திரைப்படம் லைக்கா நிறுவனத்திற்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி இருந்தது. இப்பொழுது வெளியான வேட்டையன் திரைப்படம் ஓரளவு வசூலை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

ரஜினியின் உதவி:

அடுத்து விடாமுயற்சி படமும் ஓடிவிட்டால் ஜேசன் சஞ்சயின் திரைப்படத்தை துவங்கலாம் என்று ஒரு முடிவை எடுத்தது லைக்கா நிறுவனம் . மறைமுகமாக ரஜினியின் திரைப்படம் ஜேசன் சஞ்சய்க்கு உதவியாக அமைந்தது.

ஆனால் விடாமுயற்சி திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட்டுவிட்டு அடுத்து மே மாதத்திலிருந்து ஜேசன் சஞ்சய் திரைப்படத்தை துவங்கலாம் என்று திட்டமிட்டனர். அதற்குள்ளாக நடிகர் அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தை எப்படியாவது பொங்கலுக்கு வெளியிட திட்டமிட வேண்டும் என்று பேசி வருகிறாராம்.

அப்படி ஒரு வேளை குட் பேட் அக்லி பொங்கலுக்கு வெளியாகும் பட்சத்தில் விடாமுயற்சி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போகும். இது ஜேசன் சஞ்சயின் திரைப்படத்தையும் தாமதமாக்கும் என்று கூறப்படுகிறது.

To Top