ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிச்சாச்சு.. விஜய் மகனை காப்பாற்றிய ரஜினி.. மகிழ்ச்சியில் ஜேசன் சஞ்சய்.!

விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய்க்கு இயக்குனராக வேண்டும் என்பதுதான் வெகுநாளைய ஆசையாக இருந்து வந்தது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குனர் ஆவதற்காகவே வெளிநாட்டுக்கு சென்று படித்து விட்டு  வந்தார் ஜேசன் சஞ்சய்.

இந்த நிலையில் லைகா நிறுவனம் தற்சமயம் ஜேசன் சஞ்சய்  இயக்கும் திரைப்படத்தை தயாரிப்பதாக கூறியிருந்தது. இது பலருக்குமே மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் லைகா நிறுவனத்திற்கு அதே சமயம் பெரிய நெருக்கடியும் உருவானது. அதாவது லைக்கா நிறுவனம் தயாரித்த திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை கண்டு வந்தன. அவர்கள் தயாரித்த படங்கள் வெற்றி பெற்றால்தான் அந்த தொகையை வைத்து மீண்டும் அடுத்த படத்தை நிறுவனத்தால் இயக்க முடியும் என்கிற சூழல் இருந்து வந்தது.

jason sanjay
jason sanjay
Social Media Bar

காப்பாற்றிய ரஜினி

இந்த நிலையில் இப்படி தொடர்ந்து திரைப்படங்கள் தோல்வியை கொடுத்தது அவர்களுக்கு பொருளாதார ரீதியான பிரச்சனையை ஏற்படுத்தியது. இதனால் ஜேசன் சஞ்சய் திரைப்படத்தை தாமதமாக துவங்கலாம் என்று கூறிவிட்டது லைக்கா நிறுவனம்.

ஏற்கனவே வெளியான லால் சலாம் மற்றும் இந்தியன் 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் அவர்களுக்கு தோல்வியை கொடுத்ததால் லைக்கா நிறுவனம் யோசனையிலிருந்தது. ஆனால் தற்சமயம் வெளியான வேட்டையன் திரைப்படம் நல்ல வசூலை பெற்றுக் கொடுத்திருக்கும் காரணத்தினால் தற்சமயம் ஜேசன் சஞ்சய் அவரது திரைப்படத்தை தொடரலாம் என்று கூறியிருக்கிறது. லைகா நிறுவனம்.