ஜெயம் ரவி விவாகரத்து குறித்த விஷயங்கள் சில மாதங்களாகவே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது ஏனெனில் தமிழ் சினிமாவில் பெரிதாக சர்ச்சைக்கு உள்ளாகாத ஒரு நடிகராக இருந்து வந்தவர் நடிகர் ஜெயம் ரவி.
ஆனால் அவரே விவாகரத்து விஷயத்தில் முதலில் அறிக்கை விட்டார் என்பது பலரும் அறிந்த விஷயமாக இருந்தது. பணரீதியான நெருக்கடி மற்றும் உறவுகளுக்கு இடையே இருந்த பிரச்சனை இந்த மாதிரியான நிறைய காரணங்களால் ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல்தான் ஜெயம் ரவி இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
நீதிமன்றத்தின் பதில்:

இந்த நிலையில் இது குறித்து நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு ஒன்றை கொடுத்திருந்தார் ஜெயம் ரவி. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் ஜெயம் ரவி ஆஜரான பிறகு அவரிடம் குடும்ப நல நீதிமன்றத்தில் கணவனும் மனைவியும் ஆலோசனை பெற வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருக்கின்றனர்.
சமரச ஆலோசனைக்கு பிறகும் இருவரும் சேர்ந்து வாழ வேண்டாம் என்று முடிவுடனே இருந்தால் அதற்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகளை பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.






