Hollywood Cinema news
The Chosen இயேசு கிறிஸ்து குறித்து வந்த தமிழ் சீரிஸ்.. எத்தனை பேர் பார்த்து இருக்கீங்க..!

உலகில் மக்கள் அதிகம் வணங்கும் மதங்களில் கிருஸ்துவ மதம்தான் முதல் இடத்தை பிடித்துள்ளது. அநீதிகளை எதிர்க்க பழி வாங்க வேண்டும் என கூறாமல் எதிரியையும் மன்னிக்க வேண்டும் என்கிற கிருஸ்துவ தத்துவத்திற்கு உலக அளவில் தனிப்பட்ட மதிப்பு இருந்து வருகிறது.
யூதர்களின் ராஜாவான மெசியா வருவார் என மக்கள் பல காலங்களாக காத்திருக்கின்றனர். அப்போது மெசியாவாக நாசரேத்தை சேர்ந்த இயேசு என்பவர் வருகிறார். அவர் பல புதுமைகளை செய்கிறார். ஆனாலும் கூட மக்களால் வெறுக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படுகிறார்.
அவர் இறந்ததற்கு பிறகு அவரை பின்பற்றியவர்கள் யேசுவின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதுகின்றனர். நாளாடைவில் அது புனித புத்தகமாக மாறி கிருஸ்துவம் என்கிற மதம் உருவாகிறது.
என்னதான் உலகம் முழுக்க கிருஸ்துவர்கள் இருந்தாலும் அவர்களில் பெரும்பாலோனோர் பைபிளை முழுதாக படிப்பதே இல்லை. இந்த நிலையில் காட்சி வழியாக அவர்களுக்கு பைபிள் கதையை உணர்த்தவே சோசன் என்கிற சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட இந்த சீரிஸ் தமிழ் மொழியிலும் கூட டப்பிங் செய்யப்பட்டுள்ளது. https://watch.thechosen.tv/ என்கிற இணையத்தளத்துக்கு செல்வது மூலமாக இலவசமாக இந்த சீரிஸை பார்க்க முடியும்.