Tech News
ரீச்சார்ச் திட்டங்களில் மாற்றத்தை கொண்டு வந்த ஜியோ ஏர்டெல்.. அரசின் புது நடவடிக்கையால் வந்த விளைவு.!
ஒரு காலக்கட்டத்தில் மக்கள் மொபைல் ரீச்சார்ஜ் என்றால் 10 ரூபாய்க்கு கார்டு வாங்கி போட்டு வந்தனர். ஆனால் இப்போது ரீச்சார்ஜ் திட்டங்களின் விலை என்பது எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. ரீச்சார்ஜ்க்கு ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
பாமர மக்கள் பலரும் மாதா மாதம் மொபைல் ரீச்சார்ஜ் செய்யவே பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இன்னமும் இணைய வசதி இல்லாத பேசிங் மொபைல்களை பயன்படுத்துபவர்கள் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
இந்த நிலையில் தொடர்ந்து அவர்களுக்கு பயன்படும் வகையிலான பேக்குகள் எதையும் தொலை தொடர்பு நிறுவனங்கள் அறிவிக்கவில்லை. மாறாக அனைத்து பேக்குகளுமே இண்டர்நெட் வசதி கொண்ட பேக்குகளாகவே இருந்து வந்தன.
இதனால் பேசிக் மொபைல் வைத்திருப்பவர்கள், மற்றும் இணையத்தின் தேவை இல்லாதவர்கள் கூட இணையத்துடன் கூடிய பேக்குகளை ரீச்சார்ச் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது.
இந்த நிலையில் போன் மட்டும் செய்துக்கொள்ளும் வகையில் பேக்குகளை அறிமுகப்படுத்த வேண்டும் என போன வருடமே அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்சமயம் ஜியோ இரண்டு பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது 458 ரூபாய்க்கு 84 நாட்களுக்கு அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 1958 ரூபாய்க்கு ஒரு வருடம் முழுக்க அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் தினசரி 10 எஸ்.எம்.எஸ்களை வழங்கியுள்ளது ஜியோ.
ஏர்டெல் நிறுவனம் 509 ரூபாய்க்கு 84 நாட்களுக்கு அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 900 எஸ்.எம்.எஸ், அதே போல 1999 ரூபாய்க்கு ஒரு வருடம் முழுக்க அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 3600 எஸ்.எம்.எஸ்களை வழங்கியுள்ளது.
இந்த திட்டங்களுக்கு தற்சமயம் வரவேற்பு கிடைக்க துவங்கியுள்ளது.
