News
இன்று வெளியாகவிருக்கும் ஜியோ ஏர் ஃபைபர்!.. என்னவெல்லாம் இருக்கு..
மொத்த இந்தியாவிற்கும் தற்சமயம் ஏர்டெல் மற்றும் ஜியோ இரு நிறுவனங்களும் போட்டி நிறுவனங்களாக இருந்து வருகின்றன. நெட்வொர்க் தொழில்நுட்பத்தில் வரும் புதிய புதிய விஷயங்களை இவை போட்டி போட்டுக்கொண்டு இந்தியாவிற்குள் கொண்டு வந்து கொண்டுள்ளன.
தொழில்நுட்பத்தில் அடுத்த பாய்ச்சலாக ஏர் ஃபைபர் என்கிற விஷயம் இருந்து வருகிறது. இணையத்தை ஃபைபர் ஒயர் கொண்டு கொடுத்து வருவதின் அடுத்தக்கட்ட தொழில்நுட்பமாக ஃபைபர் ஒயர் இலலாமல் இண்டர்நெட் வழங்குவதே இதன் நோக்கமாகும்.
இதன் மூலம் சின்ன சின்ன கிராமங்களுக்கு கூட அதிவேக இணையத்தை வழங்க முடியும். போன வருடம் தீபாவளியன்றே தனது ஏர் ஃபைபர் திட்டம் குறித்து ஜியோ கூறியிருந்தது. ஆனால் ஜியோவிற்கு முன்பாகவே ஏர்டெல் நிறுவனம் டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் ஏர் ஃபைபரை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று ஜியோ நிறுவனம் தனது ஏர் ஃபைபரை வெளியிட உள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் ஏர் ஃபைபரை கொண்டு வர போவதாக ஜியோ கூறியுள்ளது. இதற்கான டிவைசின் விலை 6000 ரூபாய் என கூறப்படுகிறது.
5ஜி இணையத்துடன் வரும் ஜியோ ஏர் ஃபைபர் 1ஜிபி பெர் செகண்ட் வரை இணையம் வழங்கவுள்ளது என கூறப்படுகிறது. ஆனால் சிக்னல் அளவை பொறுத்து இணையத்தின் வேகத்தில் மாற்றம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
