Tech News
895 ரூபாய்க்கு ஒரு வருட ப்ளான்.. புது திட்டத்தை அறிவித்த ஜியோ நிறுவனம்.!
இணையத்தின் பயன்பாடு அதிகரித்த பிறகு தொடர்ந்து எல்லா ப்ளான்களிலுமே டேட்டா ஆப்ஷனையும் வைத்து அதற்கும் வசூலித்து வந்தது சிம் நிறுவனங்கள்.
இந்த நிலையில் இணைய வசதி இல்லாத மொபைல் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் கூட இதனால் டேட்டா பேக்குகளை போட வேண்டிய சூழ்நிலை உருவானது. இது மக்களுக்கு வெகு நாட்களாக அவதியை ஏற்படுத்தி வந்தது.
இந்த நிலையில் இந்த பிரச்சனை இந்திய டெலிகாம் துறையின் காதுகளுக்கு சென்றது. இதனை தொடர்ந்து டேட்டா அல்லாத அழைப்புகளை மட்டும் மேற்கொள்ளும் விதமாக பேக்குகளை அறிமுகப்படுத்த வேண்டும் என சிம் நிறுவனங்களுக்கு ஆணை பிறப்பித்தது அரசாங்கம்.
அதன்படி தற்சமயம் மாத கணக்கிலும் வருட கணக்கிலும் அழைப்புகளை மட்டும் மேற்கொள்ளும் ப்ளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது ட்ராய். ஆனாலும் வருடாந்திர ப்ளான்கள் எல்லாம் 1800 ரூபாய் வரை விலை மதிப்பீட்டில் உள்ளது
ஜியோ நிறுவனமும் வருடம் முழுவதும் அழைப்புகளை மேற்கொள்வதற்கான ப்ளான்களை 1748 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியிருந்தது. அதன்படி 336 நாட்களுக்கு அன்லிமிடெட் கால்கள், 3600 எஸ்.எம்.எஸ் மற்றும் ஜியோ டிவி, ஜியோ க்ளவுட் போன்ற அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த நிலையில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த ப்ளானின் விலையை குறைக்க முடிவெடுத்துள்ளது ஜியோ. அதன்படி இதே ப்ளானை 895 ரூபாய்க்கு வழங்க முடிவு செய்துள்ளது.
இந்த அதிரடி விலை குறைப்பை பார்த்து மற்ற சிம் நிறுவனங்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளன.
