தமிழில் வந்த ஜுஜுட்சு கைசன் சீசன் 2… அடுத்த சீசனோடு கதை முடியுது…

Jujutsu kaisen season 2: தமிழ் மக்கள் மத்தியில் இணையம் பரவலாக பயன்பாட்டிற்கு வந்தது முதல் அனைத்து மொழி சீரிஸ்களையும் பார்க்க துவங்கியுள்ளனர்.

அதிலும் ஜப்பான் அனிமேவிற்கு அதிகப்படியான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். நருட்டோ, ஒன் பீஸ் என தமிழ்நாட்டு மக்கள் அனிமேவை பார்ப்பதை பார்த்த க்ரஞ்சிரோல் என்னும் அனிமே ஓ.டி.டி நிறுவனம் அனிமே தொடர்களை தமிழாக்கம் செய்ய துவங்கியுள்ளது.

அப்படி தமிழில் வெளிவந்த அனிமே தொடர்தான் ஜுஜுட்சு கைசன். ஜுஜுட்சு ஹை ஸ்கூல் என்னும் பள்ளியானது கெட்ட சக்திகளை அழித்து மனிதர்களை காப்பதற்காக சக்தி வாய்ந்த மனிதர்களை உருவாக்கும் பள்ளி ஆகும்.

முதல் சீசனின் கதைப்படி யூஜி இட்டாதோரி என்னும் மாணவன் சுகுனா என்னும் பெரும் அரக்கனின் விரலை விழுங்கியதால் அவனின் சக்திகளை பெறுகின்றான். எனவே இவனை ஜுஜுட்சு பள்ளியில் சேர்த்துக்கொள்கின்றனர்.

Social Media Bar

முதல் சீரிஸ் கொஞ்சம் பொறுமையாகதான் சென்றது. ஆனால் இதன் இரண்டாவது சீரிஸ் வெறித்தனமாக சென்று கொண்டுள்ளது. பொதுவாக கார்ட்டூன் என்பது சிறுவர்கள் பார்க்கும் வகையில் இருக்கும். ஆனால் ஜப்பான் அனிமே ரத்தம் தெரிக்க தெரிக்க இருப்பதால் இது சிறுவர்கள் பார்க்க உகந்தது அல்ல.

இரண்டாம் சீசனில் உலகில் மிக சக்தி வாய்ந்த மந்திரவாதியான சாத்துரு கோஜுவை சிறைப்பிடிக்கிறான் அவனது நண்பன் கோஜோ. இதனையடுத்து சாத்துருவை காப்பாற்றுவதற்காக மொத்த ஜுஜுட்சு குழுவும் களத்தில் இறங்க அவர்களை அழிக்க மொத்த தீய சக்திகளும் கூட இறங்குகின்றன.

ஒட்டு மொத்தமாக ஒரு பெரும் போர்க்களமாக செல்கிறது இரண்டாம் சீசன். இதில் மொத்தம் 23 எபிசோடுகள் உள்ளன. அடுத்த சீசன் அடுத்த வருடம் வரவிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அநேகமாக அதுவே ஜுஜுட்சு கைசனின் இறுதி சீசனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.