TV Shows
ஹிந்தியில் சர்ச்சையாக நடித்த ஜோதிகா.. வைரலாகும் காட்சி..!
கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு நடிகை ஜோதிகா மும்பையிலேயே வீடு வாங்கி அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
நடிகர் சூர்யாவும் இப்பொழுது மும்பையில்தான் இருக்கிறார் படப்பிடிப்புகளுக்கு மட்டும் அவர் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு சென்று கொண்டுள்ளார்.
இந்த நிலையில் மும்பை சென்ற பிறகு ஜோதிகா தொடர்ந்து பாலிவுட் சினிமாவின் மீது கவனம் செலுத்த தொடங்கினார். தொடர்ந்து ஹிந்தியில் வாய்ப்புகளைப் பெற்று நடிக்க துவங்கினார். அப்படியாக அவர் சமீபத்தில் ஸ்ரீகாந்த் என்கிற ஒரு திரைப்படத்தில் கூட நடித்திருந்தார்.
அந்த படம் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இந்த நிலையில் ஜோதிகாவிற்கு தொடர்ந்து பாலிவுட்டில் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.
சில வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். அப்படியாக சமீபத்தில் அவர் நடித்த வெப் சீரிஸ் அதிக வைரல் ஆகி வருகிறது. ஏனெனில் Dabba Cartel என்னும்அந்த வெப் தொடரில் ஒரு காட்சியில் நடிகை ஜோதிகா சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன.
அதை பார்த்த ரசிகர்கள் பாலிவுட் சென்ற பிறகு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் நடித்து வருகிறார் ஜோதிகா என்று விமர்சனம் அளித்து வருகின்றனர்.
