ஆமை புகுந்த மாதிரி அந்த வீட்டுல புகுந்துட்டியேடா?.. ஞானவேல் ராஜாவை விளாசிய பிரபலம்…

Producer Kalaipuli S Thanu and producer Gnanavel Raja had problems with the release of the film. Kalaipuli S Thanu, who was angry about this, has spoken very boldly

தமிழில் பிரபல தயாரிப்பாளராக பல காலங்களாகவே இருந்து வருபவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. பெரும்பாலும் ஞானவேல் ராஜா தயாரிக்கும் திரைப்படங்களுக்கு ஒரு நல்ல வரவேற்பு இருந்து வந்தது.

 ஆனால் சமீப காலமாக அவர் தயாரிக்கும் படங்கள் பெரும்பாலும் வரவேற்பு பெறுவதில்லை. முதன்முதலாக பருத்தி வீரன் படத்தை தயாரித்ததன் மூலமாக சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானார் ஞானவேல் ராஜா. ஞானவேல் ராஜாவிற்கும் நடிகர் சூர்யாவின் குடும்பத்தினருக்கும் இடையே வெகு காலமாகவே நட்பு இருந்து வருகிறது.

இதனால் சில சமயங்களில் ஞானவேல் ராஜா ஏதாவது பிரச்சனையில் சிக்கிக் கொண்டால் கூட அப்பொழுது சிவக்குமாரின் குடும்பம் அவரை காப்பாற்றி இருக்கிறது. இந்த நிலையில் தற்சமயம் ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் கங்குவா.

கடுப்பான தயாரிப்பாளர்

Social Media Bar

கங்குவா திரைப்படத்தை வெளியிடுவதில் தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து வருகின்றன. இந்த திரைப்படத்தை ஏற்கனவே இரண்டு முறை தேதி மாற்றம் செய்திருக்கின்றனர். ஏற்கனவே அக்டோபர் பத்தாம் தேதி இந்த படம் திரைக்கு வர இருந்தது.

ஆனால் அந்த நாளில் ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படம் வெளியானதால் இந்த படத்தின் வெளியீட்டு தேதி மாற்றி வைக்கப்பட்டது இந்த நிலையில் இது குறித்து பேசிய பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு கூறும் பொழுது ஆமை புகுந்த வீடு விளங்காத மாதிரி ஞானவேல் ராஜா சிவகுமாரின் வீட்டிற்கு சென்றதாலேயே அவர்கள் இப்பொழுது பிரச்சனையை சந்தித்து வருகின்றனர் என்று கூறியிருக்கிறார்.

இதுதான் காரணம்:

மேலும் அவர் கூறும் பொழுது எந்த ஒரு தடை வந்தாலும் படத்தை வெளியிடும் சக்தி இருக்க வேண்டும். அதெல்லாம் இல்லாமல் என்ன தயாரிப்பாளராக இருக்கிறான் என்று கேட்டிருந்தார். கலைப்புலி எஸ் தானுவின் திரைப்படம் ஒன்றை ஞானவேல் ராஜா வெளியிட்டு தருவதாக கூறியிருக்கிறார் இதனால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

இதற்கு பதில் அளிக்கும் பொழுது கலைப்புலி எஸ் தானு எந்த சேட்டிலைட்க்கும் விற்கவில்லை என்றாலும் எனது திரைப்படத்தை நான் விட்டு விடுவேன். எந்த ஒரு ஓடிடிக்கு விற்பனையாக விட்டாலும் கூட என்னால் திரையரங்கில் வெளியிட முடியும். அந்த கெப்பாசிட்டி உனக்கு இருக்கிறதா? உன்னுடைய திரைப்படத்தையே உன்னால் வெளியிட முடியவில்லை இதில் என்னுடைய படத்தை வெளியிடப் போகிறாயா? என்று கேட்டிருக்கிறார் எஸ் தாணு.