பொறுமை எல்லாம் ஒரு அளவுக்குதான் ப்ரோ! என்னயவே மிரட்டுறீங்க!. பிக்பாஸ் போட்டியாளர்களால் கடுப்பான கமல்!..

மாயா கேப்டனாக ஆனதில் இருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுப்பிடித்து செல்ல துவங்கியது. ஏனெனில் மாயா கேப்டனாக இருந்தப்போது கேப்டனாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் புல்லி கேங் என்னும் ஒரு குழுவை உருவாக்கி அனைவருக்கும் பிரச்சனை கொடுத்து வந்தார்.

அர்ச்சனா மற்றும் விச்சித்திராவிற்கு அதிக ரசிக பட்டாளம் உருவாக இது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் வாரா வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அந்த வாரம் நடந்தது குறித்து கமல்ஹாசனுடன் இரு நாட்களுக்கு விவாதம் செல்வதை பார்க்க முடியும்.

Social Media Bar

ஒவ்வொரு முறையும் கமல்ஹாசனும் பிக்பாஸை பார்க்கிறார் என்பதை மறந்து பலரும் ஏதாவது பேசிவிடுகின்றனர். இது கமலுக்கு தெரிய வரும்போது அவர் வார இறுதியில் அதற்காக அவர்களை வைத்து செய்வதையும் பார்க்க முடிகிறது.

ஏற்கனவே பூர்ணிமா கமலை விமர்சித்து பேசியது பெரிதாக ட்ரெண்டிங் ஆனது. இந்த நிலையில் இந்த வாரமும் அமைதியாக இல்லாமல் கமலை குறித்து விமர்சித்துள்ளனர் போட்டியாளர்கள். அதில் அவர்கள் பேசும்போது இந்த முறை இந்த விஷயம் குறித்து கமல் கேள்வி கேட்கவில்லை என்றால் அவ்வளவுதான் என்று கூறியிருந்தனர்.

இதனை கேட்ட கமல்ஹாசன் இன்று பேசும்போது என்னை என்னவோ பண்ண போறேன்னு சொன்னீங்களே!. என்ன பண்ணுடுவீங்க என மிகவும் கோபத்துடன் கேட்டுள்ளார். இந்த நிகழ்வை அடுத்து ஆண்டவர் என்ன செய்ய போகிறார் என்பது சஸ்பென்சாக இருக்கிறது.