நான் அமெரிக்கால இருந்து வர்ற வரைக்கும்தான் உனக்கு டைம்… லோகேஷ்க்கு கமல் கொடுத்த கடைசி வார்னிங்..!

தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் மிக முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். தோல்வி முகமே காணாத ஒரு இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார்.

அவர் இயக்கும் பெரும்பான்மையான திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்து வருகின்றன. இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜிடம் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளும் அதிகரிக்க தொடங்கி இருக்கின்றன. லோகேஷ் கனகராஜ் ஒரு திரைப்படத்தையும் மற்றொரு திரைப்படத்தையும் இணைத்து படமாக்குவதை ஒரு விஷயமாக செய்து வருகிறார்.

அந்த வகையில் விக்ரம் திரைப்படத்தில் கைதி திரைப்படத்தையும் இணைத்து இருந்தார். தொடர்ந்து கைதி 2 மற்றும் விக்ரம் படத்தின் அடுத்த பாகம் வரும் என்பது மக்களது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் தொடர்ந்து வெவ்வேறு திரைப்படங்களை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படங்களை இன்னமும் இயக்க துவங்கவில்லை.

Social Media Bar

விக்ரம் 3 அப்டேட்:

விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு லியோ திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்சமயம் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கு பிறகுதான் அவர் கைதி 2 திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவிற்கு சென்றிருக்கும் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜுக்கு போன் செய்ததாக கூறப்படுகிறது. அதில் பேசிய கமல்ஹாசன் அமெரிக்காவிலிருந்து நான் திரும்ப வருவதற்குள் கைதி 2 திரைப்படத்தை முடித்திருக்க வேண்டும் நான் வந்தவுடன் விக்ரம் திரைப்படத்தின் அடுத்த பாகத்தை துவங்க வேண்டும் என்று முடிவாக கூறியிருக்கிறாராம் கமல்ஹாசன்.

இதனால் லோகேஷ் கனகராஜுக்கு திரைப்படங்களை எடுத்து முடிப்பதற்கான அழுத்தம் இன்னமும் அதிகமாகி இருக்கிறது.