Cinema History
கடன் கேட்டு வந்த பாலு மகேந்திரா! – கமல் செய்த சம்பவம்!
தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவை முயற்சித்து வந்த இயக்குனர்களில் முக்கியமானவர் பாலு மகேந்திரா. இவர் இயக்கிய பல படங்கள் அப்போது பெரும் ஹிட் கொடுத்துள்ளன. இதனாலேயே பாலு மகேந்திராவிற்கு தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பு இருந்தது.

ஆனால் இயக்குனர் என்பதால் பாலு மகேந்திராவிற்கு சம்பளம் சற்று குறைவுதான். ஒரு முறை அவசரமாக பாலு மகேந்திராவிற்கு ஒரு தொகை தேவைப்பட்டது. தெரிந்த நடிகர்களிடம் கேட்டு பார்த்தார். யாரும் கொடுக்க முன் வரவில்லை.
எனவே கமல்ஹாசனிடம் சென்று கேட்கலாம் என நினைத்தார் பாலு மகேந்திரா. ஏனெனில் அப்போது பாலு மகேந்திராவும் கமல்ஹாசனும் நல்ல நண்பர்களாக இருந்தனர். எனவே கமல்ஹாசனின் அலுவலகத்திற்கு சென்று அவரை சந்தித்துள்ளார் பாலு மகேந்திரா. பாலு மகேந்திராவை பார்த்ததும் அவரை அமர வைத்து உலக சினிமா குறித்து பேச துவங்கிவிட்டார் கமல்ஹாசன்.
வேறு வழி இல்லாமல் பாலு மகேந்திராவும் அவருக்கு கம்பெனி கொடுத்து கொண்டிருந்தார். சில மணி நேரம் கழித்து ஐயோ ஷூட்டிங்கிற்கு நேரமாகிவிட்டதே என கிளம்பினார் கமல்ஹாசன். சரி இப்போது கேட்டால் சரியாக இருக்காது. பிறகு கேட்கலாம் என கிளம்பினார் பாலு மகேந்திரா.
ஆனால் வேகமாக வந்த கமல்ஹாசன் ஒரு பையை பாலுமகேந்திராவிடம் நீட்டினார். அந்த பையில் பாலு மகேந்திரா எதிர்பார்த்ததை விடவும் அதிக பணம் இருந்தது. இது உங்களுக்கு கடன் அல்ல. அடுத்த படத்திற்கான அட்வான்ஸ். என்னை வைத்து ஒரு படம் இயக்கி கொடுங்கள் என கூறியுள்ளார் கமல்.
அப்படி உருவான திரைப்படம்தான் கமல் நடித்து பாலு மகேந்திரா இயக்கிய சதி லீலாவதி திரைப்படம்.
