வெள்ளித்திரையில் பல நடிகர், நடிகைகள் பிரபலமாக உள்ளதை விட ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்கள் தான் அதிகம். அந்த வகையில் பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக அமைந்திருந்தது.
இந்நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த 7ஆண்டுகளாக 7 சீசன்கள் நடந்திருக்கிறது. மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அனைவரும் மக்கள் மத்தியில் ஏதோ ஒரு வகையில் இடம் பிடித்து விடுவார்கள்.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரசியமாக சென்று கொண்டதற்கு காரணம் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் தான்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல முன்னணி நடிகரான கமல்ஹாசன் தற்பொழுது ஒரு அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சியாகும். மேலும் ரியாலிட்டி ஷோவான இந்த நிகழ்ச்சி 100 நாட்களை கொண்டது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் எவ்வித வெளித்தொடர்பும் இல்லாமல் போட்டியில் கலந்துக்கொள்வார்கள்.
இந்நிலையில் தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 7ஆண்டுகளாக வெற்றிகரமாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்து இருக்கிறது. மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்களின் வாழ்க்கை மாறி உள்ளது. அவர்களுக்கு வெள்ளித்திரையிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது.
கமல்ஹாசன் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை
இந்நிலையில் பிக் பாஸ் தமிழ் சுவாரசியமாக நடப்பதற்கு மற்றொரு காரணம் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன். வாரத்திற்கு சனி, ஞாயிறு என்ற இரு எபிசோடில் இவரை காணலாம்.
மேலும் இவர் வரும் அந்த இரண்டு நாள் எபிசோடு ஆக மக்கள் காத்திருப்பார்கள். ஏனென்றால் இவர் சமூகத்தில் நடக்கும் பல கருத்துக்களை அந்நிகழ்ச்சியின் வழியாக மக்களுக்கு தெரிவித்து வந்தார்.
இவர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் தனித்துவமாக இருக்கும். அதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தார் கமல்ஹாசன்.
இந்நிலையில் அவர் தற்பொழுது வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் “நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகி உள்ளேன். இனிமேல் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இல்லை” என்று அதிகாரப்பூர்வ தகவலை கூறியிருக்கிறார்.
மேலும் படங்களில் கால்ஷீட் கமிட்மெண்ட்ஸ் ஆல் இனி வரும் பிக் பாஸ் சீசனில் பங்கேற்க முடியாது என்றும், விஜய் டிவிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள குழுவினருக்கும் என்னுடைய நன்றிகள் என தெரிவித்திருக்கிறார் கமல்ஹாசன்.

இவரின் அறிக்கையை பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர்கள் வருத்தத்துடன் கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள். மேலும் வரும் பிக் பாஸ் சீசன் 8-ல் யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.