Cinema History
நண்பனின் மகன் இறந்ததை படத்தில் காட்சியாக வைத்த கமல்ஹாசன்!.. எந்த படம் தெரியுமா?
இந்திய சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு பிறகு பெரும் நடிகராக பார்க்கப்படுபவர் கமல்ஹாசன். வட இந்திய நடிகர்களே அப்போது வியந்த ஒரு நடிகராக கமல்ஹாசன் இருந்தார். அவர் நடித்த பல திரைப்படங்களில் வட இந்திய நடிகர்களால் கூட நடிக்க முடியாது என்கிற ரீதியில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
அப்படி அவர் நடித்த ஒரு திரைப்படம் அன்பே சிவம். அன்பே சிவம் திரைப்படத்திற்காக நிஜமாகவே கண்ணாடியை அணிந்து கொண்டு கொஞ்சம் மேடான செருப்பு ஒன்றை போட்டுக்கொண்டு நடித்தார் கமல்ஹாசன். அந்த கண்ணாடியை போட்டுக்கொண்டு பார்த்தால் தலை சுற்றி மயக்கம் வரும் என்று சுந்தர் சி ஒரு முறை பேட்டியில் கூறி இருந்தார்.
அந்த திரைப்படத்தில் ஒரு காட்சியை தனது நண்பரின் மேல் ஏற்பட்ட தாக்கத்தால் கமல்ஹாசன் வைத்திருந்தார். கமல்ஹாசனுக்கு தெலுங்கு சினிமாவில் நண்பராக இருந்தவர் கொல்லப்படி மாருதி ராவ் அந்த கொல்லப்படி மாருதி ராவின் மகன் கொல்லாபடி ஸ்ரீனிவாசன்.
இவர் தெலுங்கில் இயக்குனர் ஆன காலகட்டத்தில் ஒருமுறை கடல் அலைக்கு அருகில் நின்று அலை வரும் போது தன்னை புகைப்படம் எடுக்கும்படி கூறியிருக்கிறார். ஆனால் அப்போது வந்ததோ பெரிய அலை. அந்த அலை அவரை அடித்து சென்று விட்டது.
பிறகு அவர் பிணமாகதான் கிடைத்தார் தனது நண்பரின் மகனுக்கு இப்படி ஆகிவிட்டதே என வருந்திய கமல்ஹாசன் அதை தனது தந்தையின் கதையாக அன்பே சிவம் திரைப்படத்தில் கூறி இருப்பார். மாதவனிடம் கூறும் பொழுது போட்டோ எடுப்பதற்காக எனது தந்தை ஒரு கல்லின் மேல் நின்றார். நான் போட்டோ எடுக்கும் பொழுது அலை வந்தது அது அவரை அடித்துச் சென்றது என்று கூறியிருப்பார். அது உண்மையில் இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு சொன்னது என்று கமல்ஹாசனே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்