அவரை படத்துக்குள்ளயே விடலை – கமல் குறித்து மனம் திறந்த லோகேஷ்


தமிழில் உள்ள வெற்றி இயக்குனர்களில் முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ். முதலில் குறைந்த செலவில் மாநகரம் திரைப்படத்தை இயக்கினாலும் கூட நாட்கள் செல்ல செல்ல வரிசையாக கைதி, மாஸ்டர் என பெரிய ஹீரோக்களை கொண்டு படத்தை இயக்கி தற்சமயம் விக்ரம் திரைப்படத்தையும் இயக்கி உள்ளார்.


பொதுவாக கமலஹாசன் திரைப்படம் என்றாலே எந்த இயக்குனராக இருந்தாலும் அதில் கமலஹாசன் தன் பங்கிற்கு எதாவது ஒரு மாறுதலை ஏற்படுத்திவிடுவார் என சினி வட்டாரத்தில் பேச்சுக்கள் உண்டு.


எனவே இவர் விக்ரம் திரைப்படத்திலும் கதை போன்ற விஷயங்களில் அவருக்கு தகுந்தாற்போல எதாவது மாற்றி இருக்கலாம் என்று கமல் ரசிகர்கள் பேசி வந்தனர். அதற்கு தகுந்தாற் போல இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் ஒரு கமல் ரசிகர். மேலும் இளம் வயது இயக்குனர். எனவே கண்டிப்பாக படத்தில் கமலின் தலையீடு இருக்கும் என்கிற பேச்சு இருந்தது.


இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் விக்ரம் திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் “திரைப்படத்தில் கமலின் தலையீடு இல்லை. அவரே இதில் தான் ஒரு கதாநாயகனாக மட்டும் இருந்துக்கொள்கிறேன். படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படமாகவே இருக்கட்டும்” என கூறியதாக லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.


மேலும் லோகேஷ் கனகராஜ் திரைப்படம் துவங்கும்போதே படம் முழுக்க முழுக்க தன் விருப்பப்படி அமைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாராம். எனவே விக்ரம் முழுக்க முழுக்க ஒரு லோகேஷ் கனகராஜ் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Refresh