கடவுள்களை வேட்டையாடும் பேட்மேன் ஹீரோ! தடுப்பாரா தோர்? – Thor Love and Thunder Trailer!

Lady Thor

பிரபலமான ஹாலிவுட் சூப்பர்ஹீரோ படங்களை எடுத்து உலகம் முழுவதும் கல்லா கட்டி வரும் நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ்.

Lady Thor

மார்வெல் சமீபத்தில் வெளியிட்ட ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் (Spiderman No Way Home), டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (Doctor strange and the multiverse of madness) படங்களை தொடர்ந்து அடுத்ததாக வெளியாக உள்ளது தோர் லவ் அண்ட் தண்டர் (Thor Love and Thunder)

மார்வெலில் முதன்முறையாக ஒரு சூப்பர்ஹீரோவுக்கு நான்காவது படம் எடுக்கிறார்கள் என்றால் அது தோர் கதாபாத்திரத்துக்கு மட்டும்தான். கிறிஸ் ஹெம்ஸ்வொர்ர்த் தோராக நடித்துள்ளார். நடாலி போர்ட்மேன் லேடி தோர் (ஜேன் ஃப்ராஸ்ட்) ஆக நடித்துள்ளார்.

டார்க் நைட் படத்தில் பேட்மேனாக நடித்த கிறிஸ்டியன் பேல் வில்லனாக நடித்துள்ளார். கடவுள்களை வேட்டையாடும் கோர்ர் (Gorr The God Butcher) என்ற கதாப்பாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் ஆங்கில ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் விஷுவல், எடிட்டிங் எல்லாம் ஃபேண்டசியாக இருப்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh