கலைஞர் பிறந்தநாளில் ரிலீஸாகும் விக்ரம்! – கமல் சொன்ன காரணம்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியாக உள்ள திரைப்படம் விக்ரம்.

இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வைரலாகி வரும் நிலையில் படத்திற்காக ரசிகர்கள் தீவிரமாக காத்துள்ளனர். மேலும் படத்தில் விஜய் சேதுபதி, சூர்யா, பகத் பாசில் என பலரும் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படம் ஜூன் 3ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரொமோசன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ரயில் என்ஜினில் விக்ரம் போஸ்டர், வாசனை திரவியம், தண்ணீர் பாட்டிலில் விக்ரம் பட போஸ்டர்கள், கமல்ஹாசனின் ரசிகர்கள் சந்திப்பு என நாளுக்கு நாள் விக்ரம் படத்திற்கான ப்ரோமோசன் நடந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் கமல்ஹாசன் “கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி விக்ரம் திரைப்படம் வெளியாவது மகிழ்ச்சியாக உள்ளது. சினிமாவில் என் தனித்திறமையை வளர்க்க கலைஞரும் ஒரு முக்கிய காரணம்” என அவர் தெரிவித்துள்ளார்.