Hollywood Cinema news
தனுஷுக்கு தனிப்படமே ப்ளான் பண்ணிருக்கோம்! – ஆச்சர்யப்படுத்திய அவெஞ்சர்ஸ் இயக்குனர்கள்!
தமிழ் சினிமாவின் தற்போதைய மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழ் மட்டுமல்லாது இந்தி, ஹாலிவுட் வரை பிசியாக நடித்து வருகிறார்.
முன்னதாக பக்கிரி என்ற படத்தில் நடித்தவர் தற்போது தி க்ரேமேன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அவெஞ்சர் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர்களான ரஸோ பிரதர்ஸ் இயக்கியுள்ளனர்.

இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர்களான க்ரிஸ் எவான்ஸ், ரியான் கோஸ்லிங், அனா டெ அர்மாஸ் என ஒரு நடிக பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷும் நடித்துள்ளார். இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்தே தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் என ரசிகர்கள் உற்சாகமாக காத்திருந்தனர்,
ஆனால் படத்தின் ட்ரெய்லர் வந்தபோது அதில் ஒரு காட்சியில் மட்டுமே தனுஷ் தோன்றினார். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். ஒருவேளை க்ரேமேன் திரைப்படத்தில் தனுஷ்க்கு முக்கிய கதாபாத்திரம் இல்லையோ என ரசிக வட்டாரத்தில் பேசி வந்தனர்.

இந்நிலையில் இதைப்பற்றி பேசிய ரஸ்ஸோ பிரதர்ஸ் ”க்ரேமேனில் தனுஷ் குறைந்த காட்சியில் வந்தாலும் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் தரப்பட்டுள்ளது. மேலும் அந்த கதாபாத்திரத்தை வைத்து அவருக்கென தனிப்படம் இயக்க உள்ளோம். ஏனெனில் நாங்கள் தனுஷின் மிகப்பெரிய ரசிகர்கள்” என கூறியுள்ளனர்.
இந்த செய்தியால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
