News
லிங்குசாமி விஷயத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்த கமல்ஹாசன்!.. காசு வருமா? சான்ஸ் வருமான்னு தெரியல!..
உத்தமவில்லன் திரைப்படம் காரணமாக லிங்குசாமிக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே பிரச்சனைகள் இருந்து வருகின்றன. லிங்குசாமி தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனராவார்.
பையா, அஞ்சான் மாதிரி ஒரு சில திரைப்படங்களை இயக்கியுள்ளார் லிங்குசாமி. ஆனந்தம் என்கிற திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதற்கு பிறகு அவர் இயக்கிய சண்டக்கோழி திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்தது.
இந்த நிலையில் அடுத்து லிங்குசாமி சில வருடங்களுக்கு பிறகு தயாரிப்பாளராக களம் இறங்கினார். அப்படி லிங்குசாமி தயாரிப்பில் உருவான திரைப்படம்தான் உத்தமவில்லன். வெளிநாட்டில் மாட்டிக்கொள்ளும் தனது தம்பியை கமல் எப்படி காப்பாற்றப்போகிறார் இப்படிதான் ஆரம்பத்தில் இந்த படத்தின் கதை இருந்தது.

ஆனால் படத்திற்குள் கமல் வந்த பிறகு மொத்த கதையையும் மாற்றினார். இதனால் படம் வெளியான பிறகு பெரும் தோல்வியை கண்டது. இதனை தொடர்ந்து அடுத்து லிங்குசாமி தயாரிப்பில் ஒரு படம் நடித்து கொடுப்பதாக கமல்ஹாசன் கூறியிருந்தார்.
ஆனால் இப்போதுவரை கமல்ஹாசன் லிங்குசாமிக்கு எந்த படமும் நடித்து தரவில்லை. இது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பார்வைக்கு போகவே வெகு காலங்களாக இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை சென்றுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில் கமல்ஹாசன் தற்சமயம் தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்தவர்களை இந்த விஷயமாக பேசுவதற்காக வீட்டுக்கு அழைத்துள்ளாராம். லிங்குசாமிக்கு அவர் ஏதாவது நஷ்ட ஈடு தருவாரா. அல்லது அவரது தயாரிப்பில் படம் நடித்து தருவாரா என்பதே இப்போது கேள்வியாக உள்ளது.
