Bigg Boss Tamil
பிக் பாஸ் சீசன் 7 கமல் கொடுத்த புதிய அப்டேட்!
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் எப்போதும் பிரபலமாக இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளே ஆகும். முன்பெல்லாம் கலக்கப்போவது யாரு, ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகள் விஜய் டிவியில் மிகப் பிரபலமாக இருந்தன.
ஆனால் காலத்திற்கு ஏற்றார் போல் விஜய் டிவியும் அப்டேட் ஆகிவிட்டது எனவே குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளே தற்சமயம் விஜய் டிவியில் பிரபலமானதாக இருக்கின்றன.
ஒவ்வொரு முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் பொழுது அது தொடர்பாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இந்த முறையும் யார் யாரெல்லாம் இதில் இருக்கப் போகிறார்கள் என்று மக்கள் யோசிக்க துவங்கி விட்டனர்.
இந்த நிலையில் இன்று விஜய் டிவியில் இருந்து ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தனர். இந்த முறையும் கமல்ஹாசன்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் ஷோ நாளை அக்டோபர் 1 அன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டுள்ளது.
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சிகள் இரவு 9 மணி அளவில்தான் ஒளிபரப்பாகும் ஆனால் இந்த முறை 6 முதல் 7 மணி வரை உள்ள நேரத்தை பிக் பாஸிற்காக ஒதுக்கி உள்ளனர். ஆனால் தொடர்ந்து இந்த நேரத்திலேயே ஒளிபரப்பாகுமா? என்று தெரியவில்லை.
ஏனெனில் நாடகங்கள் ஒளிபரப்பாகும் பிரைம் டைம் என கூறப்படும் நேரம்தான் 6 மணி. எனவேதான் இரவு நேரங்களில் பிக் பாஸை ஒளிபரப்பு செய்து வந்தனர். ஆனால் நாடகங்களை விட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பு இருப்பதால் தொடர்ந்து 6 மணிக்கு ஒளிபரப்பாகவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பிக் பாஸ் கமல் வீடியோவை பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்
