தளபதி 67 இல் கமல் வறாராம்? – விக்ரம் படத்தோட கனக்ட் இருக்கா?

மக்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் திரைப்படம் தளபதி 64, தற்சமயம் விஜய் வாரிசு படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக லோகேஷூடன் தளபதி 67 திரைப்படம் துவங்க உள்ளது.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தில் வேறு விதமான விஜய்யை வெளிப்படுத்தி இருந்தார். அதனால் இந்த படத்திலும் புது வகையான விஜய்யை அறிமுகம் செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வாரிசு திரைப்படத்தை காட்டிலும் தளபதி 67க்குதான் ரசிகர்கள் மரண வெயிட்டிங் என கூறப்படுகிறது.\

இந்நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் சிறப்பு காட்சியில் கமல் வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது ரசிகர்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஏற்கனவே கைதி படத்தை விக்ரமோடு கனெக்ட் செய்துள்ளார் லோகி. 

அடுத்ததாக நடிகர் சூர்யாவும் கூட இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் மாஸ்டர் விஜய்யையும் கூட படத்தில் கனெக்ட் செய்திருக்கலாம் என ரசிகர்களுக்கு ஒரு எதிர்ப்பார்ப்பு இருந்தது. 

ஒருவேளை தளபதி 67 படம் விக்ரம் அடுத்த பாகத்தோடு கனெக்ட் ஆகும் படமாக இருக்கும் பட்சத்தில் லோகேஷ் கனகராஜ், கமல், கார்த்தி, சூர்யா, விஜய் இவர்கள் எல்லோருக்குமே அது முக்கியமான படமாக இருக்கும். ரசிகர்களுக்கும் கூட ஒரு ஸ்பெஷலான படமாக இருக்கும்.

எனவே லோகேஷ் கனகராஜ் தளபதி 67 ஐ விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தோடு கனெக்ட் செய்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Refresh