News
அங்க போய் ஒரு நாளாவது இருக்கணும்… ஏங்கும் சினிமா பிரபலங்கள்.. யாருக்கும் தெரியாத கமலின் ரகசிய அறை..! அப்படி என்ன இருக்கு?.
Actor Kamal Haasan has been a leading actor in Tamil cinema for a long time. It is said that there is a room in his house that every director would like. Let’s see about it in detail now.
எப்போதுமே தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான நபராக நடிகர் கமல்ஹாசன் பார்க்கப்படுகிறார். அதற்கு முக்கிய காரணம் சாதாரண நடிகர் என்பதையும் தாண்டி கமலஹாசன் திரைத்துறையின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.
திரைத்துறை சார்ந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டவர் கமல்ஹாசன். அதனால் கமல்ஹாசன் அளவிற்கு மற்ற நடிகர்களுக்கு சினிமாவை பற்றி தெரியாது என்று கூறலாம். அந்த அளவிற்கு உலக சினிமா பலவற்றையும் பார்த்தவர் கமல்ஹாசன்.
அதனால்தான் கமல்ஹாசன் இயக்கும் படங்கள் அதிக வித்தியாசமானதாக இருக்கும். அதிக வசூல் கொடுக்க வேண்டும் என்பதை தாண்டி வித்தியாசமான திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்கிற ஆசை எப்போதுமே கமல்ஹாசனுக்கு உண்டு.
வீட்டில் உள்ள அறை:
இந்த நிலையில் கமல்ஹாசன் வீட்டில் இருக்கும் ஒரு அறை குறித்து சமீபத்தில் அமரன் திரைப்படத்தின் இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி ஒரு விஷயத்தை கூறிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது கமல்ஹாசன் வீட்டில் ஒரு தனி திரையரங்கு இருக்கிறது.
அந்த திரையரங்கில் உலகில் உள்ள பல முக்கிய திரைப்படங்களின் டிவிடிகள் மலை போல குவிக்கப்பட்டிருக்கும் அந்த படங்கள் எல்லாம் இணையத்தில் தேடினால் கூட கிடைக்காது. அப்படிப்பட்ட படங்கள் எல்லாம் அங்கு இருக்கும்.
நாம் எந்த படங்களை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் சினிமாவில் இருக்கும் பலருக்கும் இப்படியான படங்களை பார்க்கும் ஆசை இருக்கும். ஆனால் அந்த படங்கள் எல்லாம் கிடைக்காது ஒருவேளை கமல்ஹாசனின் அந்த அறைக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தால் எல்லா இயக்குனர்களும் அதற்கு வரிசை கட்டி நிற்பார்கள் என்று கூறி வருகின்றனர்.
